மதுராவிலிருந்து ஆயர்பாடிக்கு...
10 மாதம் கடந்தது. அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் தேவகி. உடனடியாககம்சனுக்கு தகவல் பறந்தது.
ஓடோடி வந்தான் கம்சன். குழந்தையை கொல்வதற்காக கையில் எடுத்தான்.தேவகியும், வசுதேவரும் அவன் காலில் விழுந்து கதறினார். எட்டாவதுகுழந்தையால்தானே உனக்கு ஆபத்து அந்த குழந்தையை உனக்குகொடுத்துவிடுகிறோம். இந்த குழந்தையை விட்டுவிடுஎன்று வேண்டினர்.
ஆனால் அதைக் கேட்க கம்சன் தயாராக இல்லை. அந்த முதல் குழந்தையை சிறைசுவற்றில் ஓங்கி அடித்துக் கொன்றான்.
இதே போல் அடுத்த 6 குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றான் கம்சன்.இந்நிலையில் 8வது முறை கர்ப்பம் தரித்தாள் தேவகி.
அழகே வடிவாக தெய்வீக பொலிவுடன் கிருஷ்ணரே தேவகியின் மகனாகப்பிறந்திருந்தார்.
கம்சனை கொல்ல பிறந்த அந்தக் குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் எனதேவகியும், வசுதேவரும் முடிவெடுத்தனர். அந்த குழந்தையை ஆயர்பாடியில்இருக்கும் தன் நண்பரான நந்தகோபன் வீட்டில் கொண்டு விடுவது என்று வசுதேவர்தீர்மானித்தார்.
அன்றைய தினம் சிறை காவலாளிகள் தங்களை மறந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.குழந்தை பிறந்ததை அவர்கள் அறியவில்லை.
இடியும், மின்னலுமாக மழை பலமாக பெய்து கொண்டிருந்தது. நள்ளிரவு நேரம்.குழந்தையை ஒரு சிறு மூங்கில் பெட்டியில் வைத்து தூக்கிக் கொண்டு சிறையை விட்டுரகசியமாய் வெளியே வந்தார் வசுதேவர்.
அவர் வெளியே காலடி எடுத்து வைத்தவுடன் 5 தலை நாகமான ஆதிசேஷன் அந்தகுழந்தைக்கு குடை பிடித்தது. விஷ்ணுவின் அவதாரமல்லவா. அவர் அனந்த சயனம்கொண்டிருக்கும் நாகமே அவருக்கு குடை பிடித்தது. வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தநீரும் விலகி வழி விட்டது.
பத்திரமாக ஆயர்பாடி வந்து சேர்ந்து தன் நண்பரான நந்தகோபரிடம் குழந்தையைஒப்படைத்துவிட்டு பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது நந்தகோபரின் மனைவியான யசோதாவுக்கு பெண் குழந்தைபிறந்திருந்தது. அந்த பெண் குழந்தை காளியின் அவதாரம். அந்த பெண் குழந்தையைதம்முடன் எடுத்துக் கொண்டு மதுராவில் தான் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குத்திரும்பினார் வசுதேவர்.
இந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்தனர் காவலர். வேகமாக போய்கம்சனுக்கு தகவல் கூறினர். என்னை கொல்வதற்காக 8வது குழந்தை பிறந்துவிட்டதா?என்று கோபத்துடன் வாளை உருவிக் கொண்டு சிறைக்கு வந்தான் கம்சன்.
குழந்தையை இடக்கையில் தூக்கி மேல் நோக்கி வீசினான். குழந்தை கீழே வந்ததும்அதை வெட்டுவதற்காக வாளை தயாராக வைத்துக் கொண்டான். ஆனால் மேலேசென்ற பெண் குழந்தை காளியாக மாறியது. கம்சா! உன் குழந்தை ஆயர்பாடியில்நலமாக வளர்ந்து வருகிறது. உனக்கு மரணம் அந்த குழந்தையால் தான் என்று சொல்லிமறைந்தது.
இதுதான் மதுராவில் பிறந்த கிருஷ்ணர் ஆயர்பாடிக்குச் சென்ற வரலாறு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications