மதுராவிலிருந்து ஆயர்பாடிக்கு...
பகவான் கிருஷ்ணர் பிறந்த தினம் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் பிறந்தார்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் 10. அவை தசாவதாரங்கள் என்றுஅழைக்கப்படுகின்றன. அவை மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராஹ அவதாரம்,வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணஅவதாரம், கல்கி அவதாரம் என்ற 10 அவதாரங்களாகும்.
இதில் 9வது அவதாரம் கிருஷ்ண அவதாரம். இனி வர இருப்பது கல்கி அவதாரம்.அத்துடன் உலகம் அழிந்துவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டுவதற்காக பிறந்தவர் கிருஷ்ணர்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, கிருஷ்ணர் பாரதப் போரின் போதுஅருச்சுனனுக்கு அருளிய கீதை உபதேசம். அது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியஅரிய உபதேசம்.
கிருஷ்ணரின் தாய் தேவகி. தந்தை வசுதேவர். தேவகியின் அண்ணனன் கம்சன்.மதுராவை ஆண்டவன். இவன் தங்கையின் மேல் அளவிட முடியாத பாசம்வைத்திருந்தான். கம்சனின் நண்பர் தான் வசுதேவர்.
தேவகியின் திருமணத்துக்கு முன் தன் தங்கை எது கேட்டாலும் இல்லை என்று கூறாதுஅனைத்தும் வாங்கிக் கொடுத்து அன்பு காட்டி வந்தார் கம்சன். தேவகிக்கும் அண்ணன்சொல்வதுதான் வேத வாக்கு. அவன் எது சொன்னாலும் தட்டாமல் செய்து வந்தார்.
தன் தங்கை திருமண வயதை அடைந்ததும், அவளுக்கு உகந்த மாப்பிள்ளையை தேடத்துவங்கினான் கம்சன். அவன் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்கவில்லை.
தன் உற்ற நண்பனான வசுதேவருக்கே தேவகியை மணமுடிப்பது என்று முடிவு செய்துஉலகமே வியக்கும் விதமாக வசுதேவருக்கும், தேவகிக்கும் திருமணம் செய்துவைத்தான் கம்சன்.
தன் தங்கையும், வசுதேவரையும் தேரில் அமர வைத்து அதற்கு தானே சாரதியாகிதேரை ஒட்டி வந்தான் கம்சன். அந்நிலையில் ஒரு அசரீரி ஒலித்தது, கம்சா உன்தங்கையின் எட்டாவது குழந்தைதான் உனக்கு எமனாக அமையப் போகிறது. உன்மரணம் அந்த குழந்தையால்தான் நிகழும் என்று ஒலித்தது.
இதைக் கேட்ட கம்சன் அதிர்ந்தான். அவன் மட்டுமல்ல தேவகியும், வசுதேவரும் கூடஅதிர்ந்தனர். தன் தங்கையின் குழந்தையாலேயே தனக்கு மரணமா? அந்தக் குழந்தைஉயிருடன் இருந்தால்தானே தன் உயிரை எடுக்கும், அதற்கு முன் அந்தக் குழந்தையைநான் கொல்வேன் என மனதில் உறுதிபூண்டான் கம்சன்.
நேராக தேரை அரண்மனைக்கு விரட்டினான். காவலர்களை அழைத்து தன் ஆருயிர்தங்கயையும், அவளது கணவர் வசுதேவரையும் திருமணம் முடிந்து வந்தவுடன்பாதாளச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அதை தனக்கு உடனே தெரிவிக்க வேண்டும் எனஉத்தரவிட்டான்.
தேவகியும், வசுதேவரும் இருண்ட பாதாளச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
காலம் கடந்தது. முதல் முறையாக தேவகி கர்ப்பமடைந்தாள். இந்தச் செய்தி கம்சனுக்குதெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications