தமிழகத்தில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை, மார்ச் 12) மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வருகிற தேய்பிறை சதுர்தசி இரவுக்கு சிவராத்திரி என்று பெயர். எனவே ஆண்டுக்கு 12சிவராத்திரிகள் உண்டு. இந்த 12 சிவராத்திரிகளில் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரிதான் மிகவும் புகழ்பெற்றதாகும்.
சிவனுக்கான 8 மகா விரதங்களில் இந்த மகா சிவராத்திரி விரதமும் ஒன்று. இந்த சிவராத்திரி நேரங்களில் நாள்முழுவதும் உபவாசம் இருந்து காலையில் சிவனுக்கு அபிஷேகம் செய்து பிறகே விரதத்தை முடிப்பர்.
இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் கோவில்களில்இன்று முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இரவில் சிறப்பு பூஜைகளும் நடக்க உள்ளன.
தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருச்செங்கோட்டில் உள்ள சிவன் கோவில்களில்பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இவை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள சிறிய கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில்கூட மகா சிவராத்திரிசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


Click it and Unblock the Notifications
