திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்:

Trichendur Senthilandavarதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 04.30 மணிக்கு சூரசம்ஹாரவிழா நடைபெறவுள்ளதையடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் கடந்த 15ம் தேதி துவங்கியது. இதையொட்டிமுருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை 04.30 மணிக்கு முருகக் கடவுளின்அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள்திருச்செந்தூரில் வந்து குவிந்துள்ளனர்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று காலை 05.00 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 07.00மணிக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனையும், 10.00 மணிக்கு கலச பூஜையும் நடந்தன.

இவற்றைத் தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும், யாகசாலையில் உள்ள ஜெயந்தி நாதர் சுவாமிக்கும்,வள்ளி-தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளன.

பகல் 12.00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உச்சிக்கால தீபாராதனையும், ஆறு தட்டு சிறப்புதீபாராதனையும் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, மேல கோவிலில் பிற்பகல் 01.30 மணிக்கு வேல், ஈட்டி மற்றும் போருக்கான ஆயுதங்களுடன்மாங்குலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சூரபதுமனை ஏற்றி நான்கு ரத வீதிகள், சன்னதித் தெரு வழியாகமுருகன் போர் புரியும் செந்திலம்பதி கடற்கரைக்கு வந்து சேருவார்கள்.

இதற்கிடையே பிற்பகல் 02.30 மணிக்கு தங்க சப்பரத்தில் புறப்படும் சுப்பிரமணிய சுவாமி, அருகிலுள்ளதிருவாடுதுறை கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுவார்.

பின்னர் சூரபதுமனை வதம் செய்வதற்காக ஜெயந்திநாதர் மண்டபத்திலிருந்து மாலை 04.30 மணிக்கு பூப்பல்லக்கில்கிளம்பி கடற்கரைக்கு வருவார் சுப்பிரமணிய சுவாமி.

சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியான "சூரசம்ஹாரம்" முடிந்த பிறகு, ஜெயந்திநாதருக்கு கடற்கரையில் உள்ளஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக சஷ்டித் தகடு வழங்கப்படும். நாளை இரவு 07.00 மணிக்கு திருக்கல்யாணநிகழ்ச்சி நடைபெறும்.

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கைஆகிய வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூரில் அலை மோதுகின்றன.

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+