சித்ரா பவுர்ணமி நாளில்! சித்ரகுப்த வழிபாடு ஏன்? பூஜை செய்வது எப்படி?
சென்னை: சித்ரா பவுர்ணமியில் சித்ர குப்தனை வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தரை ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி என்கிறோம். சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்சம் பெற்றும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் சந்திரன் முழுமை அடைந்தும் காணப்படுகிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று மேற்கொள்ளும் தெய்வ வழிபாடுகளுக்கு அதிக பலன் கிடைக்கும்.

சித்ரகுப்தர், எமதர்மனின் கணக்கர். அதாவது யாருடைய விதி முடிய போகிறது என்பதை பாவ புண்ணிய கணக்குகளை வைத்து எமனிடம் சொல்பவர். அத்துடன் இறந்த பின்னர் அந்த ஆன்மா சொர்க்கம் செல்ல வேண்டுமா இல்லை நரகம் செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிப்பவரும் இவர்தான்.
இத்தகைய சிறப்புகளை பெற்ற சித்ரகுப்தன், சித்ரா பவுர்ணமி நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தனை வழிபட்டால் பாவங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
சித்ரகுப்தனின் பிறப்பு
சித்ரகுப்தனின் பிறப்பு குறித்து பார்க்கலாம். ஒரு சமயம் கயிலாயத்தில் இருந்த பார்வதி தேவி விளையாட்டாக ஒரு அழகிய ஆண் குழந்தையின் சித்திரத்தை வரைந்தார். அப்போது அங்கு வந்த சிவனிடம் அந்த ஓவியத்தை காட்டினார்.
அப்போதுதான் தனது வேலைப்பளுவை குறைக்க தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்க எமதர்மன், சிவனிடம் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. உடனே தனது மூச்சுக்காற்றை அந்த ஓவியத்திற்கு செலுத்தி உயிர் கொடுத்தார் சிவன்.
சிவசக்தியின் அம்சமாக சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் அவருக்கு சித்ரகுப்தன் என பெயர். அவர் பிறக்கும்போதே கையில் எழுத்தாணி, ஏடுடன் பிறந்தார் என நம்பப்படுகிறது. சித் என்றால் மனம், குப்த என்றால் மறைவு, மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், நல்ல செயல்களையும் கவனித்து அதற்கேற்ப பாவ புண்ணிய கணக்குகளை எழுதி வைக்கிறார்.
இதனால் சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்யும் போது எழுத்தாணி, நோட்டு புத்தகம் வைத்து வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி நாளில் புனித நதிகளில் நீராடிவிட்டு விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று சித்ரகுப்தரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும். இந்தநாளில் கலவை சாதம் தயார் செய்து நீர் நிலைகளில் நிலாச் சோறு உண்ணும் வழக்கம் உள்ளது.
திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்பார்கள். விதியை வெல்லும் ஆற்றல் யோகமான திதிகளில் செய்யும் வழிபாட்டுக்கு உண்டு என்பார்கள். அந்த வகையில் அமாவாசை திதியும் பவுர்ணமி திதியும் மிக முக்கியமான திதிகளாகும். இதனால் இந்த திதிகளில் கடவுள் வழிபாடு முக்கியம் என்கிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications