சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், எலுமிச்சை! எதை உணர்த்துகிறது?

Subscribe to Oneindia Tamil

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சப்பிள்ளையார், வெற்றிலை - பாக்கு, அருகம்புல், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை வைத்து வழிபட பக்தருக்கு உத்தரவு வந்ததை அடுத்து ஏற்கெனவே இருந்த பொருள் எடுக்கப்பட்டு மேற்கண்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த மலைக் கோயிலில் எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இக்கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

tiruppur sivanmalai

பக்தர்களின் கனவில் முருகன் வந்து குறிப்பிட்ட பொருளை வைத்து வழிபட வேண்டும் என சொல்வார். அதை கேட்டுவிட்டு சிவன்மலைக்கு வந்து பக்தர்கள் பூசாரியிடம் சொல்வார்கள். அப்போது பூசாரி அந்த பக்தர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பூ போட்டு பார்ப்பார்.

ஒரு வேளை உண்மையாக இருந்தால் ஏற்கெனவே வழிபட்டு வரும் பொருளை கண்ணாடி பேழையில் இருந்து எடுத்துவிட்டு பக்தர்கள் சொல்லும் புதிய பொருளை வைப்பார்கள். இதனால் தான், இது 'ஆண்டவன் உத்தரவு' என்றும் அழைக்கப்படுகிறது'.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடல் நீரை வைத்து பூஜிக்குமாறு முருகன், பக்தரின் கனவில் சொன்னதை அடுத்து அதை வைத்து கோயில் நிர்வாகம் பூஜை செய்து வந்தது. இந்த நிலையில் 4 மாதங்கள் கழித்து வேறு ஒரு பக்தரின் கனவில் வந்த முருகன், உத்தரவு பெட்டியில் மஞ்சப்பிள்ளையார், வெற்றிலை பாக்கு, அருகம்புல், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை வைத்து வழிபட உத்தரவிட்டார்.

அதன்படி கண்ணாடி பெட்டியில் மேற்கண்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இது எதை உணர்த்துகிறது என்பதை பார்க்கலாம்.

மஞ்சப்பிள்ளையார், மங்கலம் மற்றும் புதிய தொடக்கங்களின் குறியீடு. விநாயகப் பெருமானின் அருளால் நாட்டில் தடைகள் அகன்று சுபிட்சம் நிலவும் என்பதை இது உணர்த்துகிறது. இது ஆன்மீக விழிப்புணர்வையும், மக்கள் மத்தியில் பக்தி அதிகரிப்பதையும் குறிக்கிறது.

வெற்றிலை பாக்கு, பாரம்பரிய மங்கல நிகழ்ச்சிகளின் அடையாளம். சமூகத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் அதிகம் நடக்கும் என்பதைக் குறிக்கும். வெற்றிலை வாயுவை உணர்த்துவதால், காலநிலை மாற்றங்கள் அல்லது காற்று தொடர்பான நிகழ்வுகளையும் இது சுட்டிக்காட்டலாம்.

அருகம்புல், நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியத்தின் சின்னம். உத்தரவுப் பெட்டியில் இது காணப்பட்டால், மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இது நாட்டில் பிணிகள் நீங்கி, நலம் பெறுவார்கள் என்பதையும், விவசாயம் செழிப்பதையும் குறிக்கலாம்.

ஆன்மீக ரீதியாக, எலுமிச்சம்பழம் திருஷ்டி கழிப்பதற்கும், தீய சக்திகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது. இது உத்தரவில் வந்தால், நாட்டில் குழப்பங்கள், தீய எண்ணங்கள் நீங்கி தெளிவான நிலை பிறக்கும். அதிகாரம் அல்லது அரசு ரீதியான மாற்றங்களையும் இது குறிக்கலாம்.

இந்த நான்கு பொருட்களும் உத்தரவுப் பெட்டியில் ஒன்றாக வரும்போது, "நாட்டில் மங்கலம் பெருகும், நோய்கள் அகலும், மக்கள் மத்தியில் தர்மம் தழைக்கும்" என நேர்மறையாக உணர்த்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+