மதுரை சித்திரை திருவிழா 2026! அழகர் வைகை ஆற்றில் இறங்குவது எப்போது! முழு விவரம்!
மதுரை: மதுரை மாநகரின் அடையாளமாகவும், சைவ - வைணவ ஒற்றுமையின் சங்கமமாகவும் திகழும் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா 2026, வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் மதுரை மாநகரில் சித்திரை திருவிழா களைகட்டும். அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்தான் பிரதானம். இதற்காக தமிழகமெங்கும் வாழும் மக்கள் வைகை ஆற்றில் குழுமியிருப்பார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அழகரை தரிசிப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா அட்டவணையின்படி, ஏப்ரல் 19-ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. அன்றிலிருந்து மதுரையே விழாக்கோலம் பூண்டு, தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் சூடுபிடிக்கின்றன. ஏப்ரல் 26-ம் தேதி மீனாட்சி அம்மன் மதுரை நகரின் அரசியாகப் பொறுப்பேற்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 27-ம் தேதி திக்விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அடுத்த நாள் ஏப்ரல் 29-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் நிலையில், அதே நாளில் அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுவார்.
மதுரை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மே மாதம் 1-ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 30-ம் தேதி, மதுரை எல்லையில் கள்ளழகரை வரவேற்கும் 'எதிர்சேவை' நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறும்.
மே 1-ம் தேதி அதிகாலை 5:45 மணி முதல் 6:15 மணிக்குள், தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இந்த ஒரு நிகழ்வைக் காண்பதற்காகவே தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.
ஆற்றில் இறங்கிய பிறகு, மே 2-ம் தேதி இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் நடைபெறும். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் கள்ளழகர், மே 4-ம் தேதி மீண்டும் அழகர் மலைக்குத் திரும்புவார்.
ஏப்ரல் 19-ல் தொடங்கி மே 4-ம் தேதி வரை சுமார் 15 நாட்களுக்கு மேல் மதுரையே தூங்கா நகரமாக மாறி, ஆன்மீகக் கடலில் மூழ்கியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்தத் திருவிழாவிற்காகத் தமிழக அரசு மற்றும் காவல்துறை இப்போதே சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டு வருகின்றன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications