திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 1: மார்கழி திங்கள் அல்லவா? இளம் பெண்களே பாசுரம் படியுங்கள்!
சென்னை: மார்கழி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் பாவை நோன்பு இருந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். ஆண்டாள் அருளிய இந்த திருப்பாவையை சிறுவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் தினந்தோறும் பாடலாம்.
கோயில்களிலும் பஜனை போல் இந்த திருப்பாவை பாடப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் திருக்கோயில்களுக்குச் சென்று இந்த பாடல்களை பாடி அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ளலாம்.
ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களும் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பாடப்படுகிறது. அது போல் மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழங்குவோர் திருவெம்பாவை படிப்பார்கள். இது மணிவாசக பெருமான் அருளியது. இது வெறும் 20 பாடல்களை கொண்டது.
திருப்பாவை பாடல்- 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாடலின் விளக்கம்: பெருமாளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதம். இந்த நன்னாளில் அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களே! ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமியர்களே! இன்று நாம் அதிகாலையிலேயே மார்கழி நீராட கிளம்பலாம். கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாக்கும் நந்தகோபன், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகன். அவனது கார்மேகத்தை போன்ற மேனி, தாமரை முகம், சிவந்த கண்கள், சூரியனை போன்று பிரகாசமான முகம் கொண்டிருப்பான். எனினும் நிலவை போன்று குளிர்ச்சியான கருணை குணமும் அவனிடம் இருக்கிறது. அந்த நாராயணனே கண்ணனாக பிறந்து நமக்காக காத்திருக்கிறான். அவனை நாம் பாடி புகழ்ந்தால் இந்த உலகே நம்மை வாழ்த்தும்.
திருவெம்பாவை பாடல் - 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: வாள் போன்ற நீண்ட கண்களை கொண்ட தோழியே! ஆதியும் அந்தமும் இல்லாத ஒளி வடிவமாய் பிரகாசிக்கும் சிவபெருமான் குறித்து நாங்கள் எல்லாம் பாடுகிறோமே, அது உன் காதில் விழவில்லையா? செவிடாகிவிட்டதா உன் காது, அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களில் சரணடைவது குறித்து நாங்கள் பாடி வருகிறோம். இதை கேட்ட ஒரு பெண் வீதியில் விம்மி அழுதாள், பிறகு பக்தியின்பால் சாலையில் புரண்டு மூர்ச்சையாகிவிட்டாள். ஆனால் நீ என்னமோ உறங்குகிறாயே!
இந்த பாடல் எதற்காக பாடப்படுகிறது என்றால் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் உலா வருகிறார். அவரை தரிசிக்க பெண்கள் எல்லாம் பயபக்தியுடன் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு செல்லும் பெண்கள், தங்கள் தோழிகளும் இத்தகைய பேரின்பத்தை அடைய வேண்டும் என எழுப்புகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications