திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 16: அய்யோ அப்படி செய்யாதே, உருபடாதுனு யாரையும் அபசகுணமா சொல்லாதீங்க!
சென்னை: மார்கழி மாதம் 16-ஆம் நாள் இன்று! ஒருவர் ஒரு செயலை செய்ய போவதாக சொன்னால் அது உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அதற்காக முன்னாடி அபசகுணமாக அதை செய்யாதே, இப்படி ஆகிடும், அப்படி நடந்திடும்னு யாரிடமும் பேசக் கூடாது என்பதைத்தான் ஆண்டாள் இந்த பாடல் மூலம் உணர்த்துகிறாள்.

திருப்பாவை பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: நந்தகோபனின் மாளிகை வாயிலில் திரண்ட ஆயர்குலச் சிறுமிகள், கொடித் தோரணங்கள் கட்டப்பட்டிருந்த அவ்வாயிலின் காவலரிடம் கதவைத் திறக்கக் கோரினர்.
மாயச் செயல்களைச் செய்யும் கரிய நிறத்து கண்ணன், நேற்று பறை தருவதாக உறுதியளித்திருந்தான். அதனைப் பெற்று, அவனைத் துயிலெழுப்பும் பாடல்களைப் பாடவே தாங்கள் நீராடி வந்திருப்பதாகவும் கூறினர். காவலர் மறுப்பு தெரிவிக்காமல் மூடிய நிலைக்கதவைத் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
திருவெம்பாவை பாடல் 16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்: ஒரு கவிதை வரிகளின்படி, வானில் திரண்டிருக்கும் மேகங்கள் கடல் நீரை உறிஞ்சி கருத்த நிறம் கொண்டு, சிவனின் தேவியான பார்வதி தேவியை ஒத்திருக்கின்றன. மின்னல் வெட்டுவது, அன்னை ஈஸ்வரியின் மெல்லிய இடையைப் போலவும், இடி முழக்கம் அவளது பொற்சிலம்புகளின் ஓசையைப் போலவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வானில் தோன்றும் வானவில், தேவியின் புருவம் போல் காட்சியளிப்பதாகக் கவிதை குறிப்பிடுகிறது. சிவனிடமிருந்து பிரியாத அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவதைப் போல, மழை விடாமல் பொழிய வேண்டும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications