Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thai Kiruthigai 2026: நாளை தை கிருத்திகை! செவ்வாய்க்கிழமையில் வருவதால் பெண்களே தவறவிடாதீர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று கிருத்திகை நட்சத்திரம் வரவிருப்பதால், அன்று என்ன மாதிரியான வழிபாடு செய்யலாம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆன்மீக பரிகாரம் எனும் யூடியூப் சேனலுக்கு ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் கூறியிருப்பதாவது: தை கிருத்திகை நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகப் பெருமான் தான். கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதால், நாளைய தினம் முருகனுக்கு விசேஷமான பூஜைகள் செய்யலாம்.

spirituality thai kiruthigai

நாளை, சூரியன் மகரத்தில் இருக்கிறார். செவ்வாயும், சூரியனும் சேர்ந்திருப்பதால், இது மேலும் சிறப்பு. தை மாத செவ்வாய்க்கிழமைகளில் சூரியன் மற்றும் சுக்கிரன் வீட்டில் சந்திரன் இருப்பதால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குப் பிரத்யேகமாகப் பிரார்த்தனைகள் செய்யலாம்.

அர்த்தநாரீஸ்வரர்

வலது கண்ணை சூரியனும், இடது கண்ணை சந்திரனும் ஆள்கிறார்கள். இவர்கள் இருவரையும் ஒருங்கே வைத்திருப்பவர் அர்த்தநாரீஸ்வரர். எனவே, அன்று சிவபெருமான் ஆலயத்தில் வழிபாடு செய்வது சிறந்தது.

சிவன் கோவிலில் முருகன் இல்லாமல் இருக்க மாட்டார். அப்படி இல்லாத பட்சத்தில் முருகன் கோவிலுக்கு சென்று கண்களுக்கு தாமரை பூ கொடுத்து அர்ச்சனை செய்யலாம். சிவனுக்கு வில்வம் கொடுத்து அர்ச்சனை செய்வது ரோக நிவாரணம் ஆகும்.

நிலம், பூமி வாங்கலாம்

நிலம், பூமி வாங்க ஆசைப்படுபவர்கள், பூமிநாதர் சன்னதியில் அர்ச்சனை செய்யலாம். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து நாம் அதிகம் பேசாத நிலையில், பாரதி ஸ்ரீதர் இந்த தை செவ்வாயில் கண் பிரச்சினைகள் நீங்க எளிய பரிகாரங்களை சொல்லியிருக்கிறார்.

கோவிலுக்கு போக முடியவில்லை என்றால்

கோவிலுக்குப் போக முடியாதவர்கள் மாட்டுக்கு வெல்லம் கொடுக்கலாம். எல்லோராலும் கோவிலுக்குப் போக முடியாது என்பதால், வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் மாட்டுக்கு வெல்லம் கொடுப்பது சிறந்த பரிகாரமாக இருக்கும். இந்த எளிய பரிகாரங்கள் மூலம் அனைவரும் நன்மையடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் அதில் முக்கியமானது தை கிருத்திகையும் ஆடி கிருத்திகையும். இந்த நாட்களில் பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு விரமிருந்து வழிபடுவது வழக்கம்.

என்ன செய்ய வேண்டும்

தை கிருத்திகை அன்று வீடுகளில் உள்ள முருகர் படத்திற்கு சந்தனம், குங்குமிட்டு மலர் சூட்டி முருகனின் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் ஆகிய மந்திர பாடல்களை பாடி முருகனை வழிபட வேண்டும். ஆறு விதமான பூக்களைக் கொண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்தால் விசேஷம்.

தை கிருத்திகை ஏன்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப இந்த ஆண்டு முருகனுக்கு வரும் முதல் விசேஷம் தை கிருத்திகை ஆகும். தை கிருத்திகையும் அவருக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உருவான முருகனை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்தனர்.

விரதம் முடிக்கலாம்

வளர்த்த 6 கார்த்திகை பெண்களையும் சிறப்பிக்கும் விதமாகவே, கிருத்திகை நாளை தனக்குரியதாக முருகன் ஏற்றார். இந்த நாளில் காலையில் இருந்து உணவு எதுவும் உண்ணாமல் வெறும் பால், பழம் சாப்பிட்டு முருகனுக்கு உகந்த பாடல்களை பாடலாம். மாலையில் அருகே இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று அங்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+