45 டிகிரி கோணத்தில் கையெழுத்து போடணுமாம்.. கையொப்பத்தில 6 புள்ளி வைத்தால் அமோக வாழ்வு.. வாவ் வாஸ்து
சென்னை: ஒருவரின் கையெழுத்து வைத்தே அவர்களின் தலையெழுத்தை நிர்ணயித்துவிடுவார்கள்.. அதேபோல, ஒருவரின் வாழ்வில் ஏற்ற - இறக்கத்தில், அவர் போடும் கையொப்பங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.. இதனை வாஸ்து நிபுணர்கள் சரியாக கணித்து சொல்லி வைத்திருக்கிறார்கள்.. இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலானோர் தங்களது பெயரையே கையெழுத்தாக போடுவார்கள்.. இந்த கையெழுத்தில் முதல் எழுத்து மட்டும் பெரிதாகவும், மற்ற எழுத்துக்கள் சிறியதாகவும் எழுதி கையெழுத்திடுவார்கள்.. இன்னும் சிலர் அனைத்து எழுத்துக்களையும் தனித்தனியாக எழுதி கையெழுத்து போடுவார்கள்.

இப்படி சம்பந்தமே இல்லாமல், கையெழுத்துக்களை போடுபவர்களின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமான பலன்களையே ஏற்படுத்தும் என்கிறார்கள்.. எனவே நெருக்கமாக இருக்கும்படி கையெழுத்து போட்டு பழக வேண்டுமாம். அதேபோல கையெழுத்தை வலது பக்கமாக சாய்த்து மேல் நோக்கி இருக்கும்படி போடும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது 45 டிகிரி கோணத்தில் கையெழுத்து போட்டால் நல்லது என்கிறார்கள் சாஸ்திர வல்லுனர்கள்
கோடு, புள்ளி, அடிக்கோடு
சிலர் கையொப்பம் போட்டதுமே, பெயருக்கு கடைசியில் ஒரு புள்ளி ஒன்றை வைப்பார்கள். இப்படி புள்ளி வைத்தால், வரக்கூடிய அதிர்ஷ்டமும் வராமலேயே போய்விடுமாம்.. அதனால், கையொப்பமிட்டு, கடைசியில் முற்றுப்புள்ளி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் ஒருவர் கையெழுத்துக்கு கீழே, கோடு போடுவார்கள்.. இப்படி கோடு போடுவது, சரியா? தவறா? என்ற குழப்பம் பலருக்கு ஏற்படும்.. கையொப்பமிட்டதும், கீழே ஒரு கோடு வரையலாம்.. அப்படி அடியில் கோடு வரைந்தாலும், அந்த கோட்டினை கையெழுத்துடன் தொடர்பு விடுபடாமல் இருக்குமாறு போட வேண்டுமாம்.. ஆனால் அந்த கோடு கையொப்பத்தை விட பெரியதாகவும், நேராகவும் இருக்க வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்..
6 புள்ளிகள்......
கையொப்பத்திற்கு கீழே ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளை கொண்டவர்கள் எப்போதுமே குழப்பத்தில் இருப்பாராம், எந்த முடிவை எடுத்தாலும் குழப்பத்திலேயே எடுப்பாராம். எனவே, கையொப்பத்தின் கீழ் கோடுகளை வரைந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளை உருவாக்க கூடாது என்கிறார்கள்.
கையெழுத்தின் கீழ் நேர்க்கோட்டை இடும்போது, அதன் கீழே 2 புள்ளிகளை வைக்கலாம்.. இதனால், கையில் பணம் ஓரளவு தங்கும்.. இப்படி நிதி கையில் தங்க தொடங்கினால் ஒவ்வொரு புள்ளிகளாக வைத்துக்கொண்டே போகலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும், உங்களது கையெழுத்தின் நேர்க்கோட்டிற்குக் கீழே இடும் புள்ளிகள் 6க்கு மேல் சென்றுவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
அழகான கையெழுத்து - கோழி கிறுக்கல் கையெழுத்து
கர்சிவ் ரைட்டிங்கில் உங்கள் கையெழுத்து இருந்தால், நீங்கள் தெளிவான சிந்தனை கொண்டவர் என்று அர்த்தம்.. உங்கள் கையெழுத்து தெளிவாக இருந்தால், நீங்கள் எப்பொழுதுமே தெளிவாக சிந்திப்பீர்கள் என்றும், குழப்பவாதி கிடையாது, சுதந்திர மனப்பான்மை உள்ளவர்கள், அனைவரிடமும் வெள்ளந்தியாக பழகி, அன்பாக பழகுவீர்கள் என்று அர்த்தம்.. உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்தாலும், பிறரது உணர்வுக்கும் முக்கியத்துவம் தரக்கூடியவர்கள்.
கோழி கிறுக்கியது போல் கையெழுத்து இருந்தால், பிளானிங் இல்லாதவர் என்று அர்த்தம்.. திடீர் திடீரென சிந்தித்து முடிவெடுத்து நடந்து கொள்வீர்கள்.. அந்த முடிவிலும் உறுதியாக இருக்க மாட்டீர்கள். ஆனால், எதையும் வித்தியாசமாக, விநோதமாக, புதுமையாக யோசிக்கக்கூடியவர்.. இதுபோன்றவர்கள் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் தத்துவ ஞானிகளாக இருப்பார்கள்.. அதனால்தான் டாக்டர்களின் கையெத்துகூட பலருக்கும் புரிவதில்லை.












Click it and Unblock the Notifications