திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் உள்பட 65 திருக்கோயில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்
சென்னை: சென்னை திருவான்மியூர் உள்பட பாம்பன் சுவாமிகள் கோயில், உலக பிரசித்தி பெற்ற குரு பகவான் கோயில் உள்பட 65 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
2021-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 1,856 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சென்னை திருவான்மியூரில், பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

நவகிரக தலங்களில் குரு பகவான், பரிகாரத் தலமாக விளங்குவது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இந்த தலம் குருவின் தோஷத்தை மட்டுமின்றி, அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கக் கூடிய தலமாக மக்களால் நம்பப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற இந்த குரு பகவான் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடக்கிறது.
இதேபோல் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற திருச்சி மாவட்டம், பூா்த்திகோவில் திருமுக்தீஸ்வரா் திருக்கோயில், சென்னை சேத்துப்பட்டு கருகாத்தம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம் கிருஷ்ணாநகா் சீதாராமச்சந்திர மூா்த்தி திருக்கோயில், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை அமிா்தகடேஸ்வரா் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில்; திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ஞாயிறு புஷ்பரதீஸ்வரா் திருக்கோயில்; கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது.
சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு ஜூலை 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் பூஜைகள், விழாக்களை அறநிலையத்துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், கும்பாபிஷேகம் நடத்தும் விஷயத்தில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது.
முன்னதாக இந்து அறநிலையத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு இன்று (ஜூலை 12) வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெறும் .
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிகள், குடமுழுக்கு, திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைப்பு, திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 07.05.2021 முதல் 11.07.2024 வரை 1,856 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு நடைபெற்று 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், ரூ.170.11 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வரும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயில், ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோயில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற திருச்சி மாவட்டம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு இன்று (ஜூலை 12) வெகு விமரிசையாக நடைபெறும்.
குடமுழுக்கு நடைபெறும் திருக்கோயில்களில் சென்னை, சேத்துப்பட்டு, கருகாத்தம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 திருக்கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்துமாரியம்மன் திருக்கோயில், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம், சுந்தர விநாயகர் திருக்கோயில், ஆகிய திருக்கோயில்களும் அடங்கும்.
இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும், திருக்கோயில் பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர், என்று இந்து அறநிலையத்துறை கூறியிருந்தது. அதன்படியே 65 கோயில்களிலும் குடமுழுக்கு விழா நடந்து வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications