ஈஸ்வரன் கோயிலில் விழும் நிழல்! பொழுது சாய்ந்தாலும் நகராமல் நிற்கும் மர்மம்? விடை கிடைக்காத அதிசயம்
சென்னை: தெலுங்கானாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோயிலில் மர்மமான முறையில் நிழல் விழுகின்றன. இவை இரவானாலும் மறையாமல் அப்படியே இருப்பது நமது கட்டடக் கலைக்கு சிறந்த எடுக்காட்டாகும். இந்த நிழல் எப்படி விழுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: மர்ம நிழல்கள் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவில், தெலுங்கானா மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சில கோவில்களில் உள்ள மர்மங்களை உலகம் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாமல் இன்றளவும் விஞ்ஞானிகளும் விழி பிதுங்கி தான் அங்கு வழிய நிற்கிறார்கள் என்றே தான் நாம் கூற வேண்டும் !!!

அந்த வகையில் ஹைதராபாத் மாநகரத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளது.!!!
10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளில் மூன்று விதமான மர்ம நிழல்கள் உள்ளன. !
(01) லிங்க கருவறை: இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலை முதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்து கொண்டே தான் போகும் அது தான் உலகின் நியதி.
அனால் இங்கு சூரியன் உதிப்பதில் இருந்து அந்தி மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. மேலும் இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்தவொரு தூணிற்காக உருவானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் தரையில் விழுவதில்லை. !!!
(02) பிரம்மா கருவறை: இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது சற்றும் புரியாத புதிராகவே உள்ளது !!!
(03) லிங்க கருவறை: இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இன்று வரையிலும் உள்ளது. சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோவிலுக்கு
ஸ்ரீ சாயா சோமேஸ்வரர் ! என்று பெயர் வந்துள்ளது.!!! நிழலை வைத்து பல மர்மங்களோடு தொடர்புடைய இந்த கோவிலை கட்டப்பட்டு உள்ளதால், தான்
இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே மக்களால் அழைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications