காவி நிற வேஷ்டி சட்டை! மொட்டை தலையுடன் விர்னு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காமெடி நடிகர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவி சட்டை, காவி வேட்டிக் கட்டிக் கொண்டு நடிகர் அஜய் கோஷ் கிரிவலம் சென்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஆங்காங்கே இவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஆந்திராவை சேர்ந்தவர் பதிபதி அஜய் கோஷ் என்ற நடிகர். இவர் நகைச்சுவை நடிகராவார். தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தவர். இவர் புஷ்பா தி ரைஸ் படத்தின் மூலம் பிரபலமானார். அது போல் குண்டூர் காரம் என்ற படத்திலும் இவர் எல்லோராலும் போற்றப்பட்டார்.

அந்த படத்தில் மகேஷ்பாபு, ஸ்ரீலீலா நடித்திருந்தனர். இதில் வந்த பிரபல பாடலான குர்சி மாடதாபட்டி என பாடலில் நடிகை பூர்ணா நடனம் ஆடுவார். ஏற்கெனவே அடிபட்டு படுத்துகிடக்கும் நடிகர் கோஷ் உணர்ச்சிவசப்படுவார்.
இவருடைய தந்தை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் சுதந்திர போராட்ட வீரருமான அஜய் கோஷின் தீவிர ஆதரவாளர் ஆவார். அவரது நினைவாக இவருக்கு அஜய் கோஷ் என பெயரிட்டுள்ளார். இவருடைய மற்ற இரு மகன்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களையே வைத்துள்ளார்.
அஜய் கோஷ் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இவர் தமிழில் விசாரணை , காஷ்மோரா, மாரி 2, காஞ்சனா 3, மூக்குத்திஅம்மன், ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படமும் இவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த அவர், சுமார் 14 கி.மீ. கொண்ட பாதையில் கிரிவலம் வந்தார். காவி நிற சட்டை, வேட்டி அணிந்திருந்த அவருடன், ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாக அவர் வந்ததை பார்த்த பலர் ஆச்சரியப்பட்டனர். பிறகு அண்ணாமலையார் கோயிலுக்கு போய் வழிபாடு நடத்தினார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த மலையை சுற்றி சித்தர்களின் ஆசிரமங்கள், ஜீவசமாதிகள், குளங்கள் போன்றவை உள்ளதால் இந்த மலையை ஒரு முறை வலம் வந்தால் அனைத்து தெய்வங்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். நெருப்பு வடிவமாக சிவபெருமான் இருக்கும் இந்த திருவண்ணாமலையில் சித்தர்கள் இன்றும் கிரிவலம் வருகிறார்கள் என சொல்லப்படுவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் பக்தர்களுக்கு கிடைக்கும். சித்தர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் பக்தர்களுக்கு தங்கள் இருப்பை காட்டுவார்கள் என்கிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications