Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சை+ அரக்கு நிற சேலையில்! "சிந்தனை செய்வோமே" திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் பாடலை பாடிய சுகன்யா

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடிகை சுகன்யா மெய்மறந்து ரமணர் பாடலை பாடினார். அவர் சிறந்த நாட்டிய கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இது போன்ற கர்நாடக பாடல்களையும் அவர் பாடியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ramanar

1980களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலேயே இவருக்கு விருதுகள் கிடைத்தன. இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி.

சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்துதான் சன் டிவியில் உமா பெப்சி உங்கள் சாய்ஸை தொகுத்து வழங்கினார். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா எனும் இரு ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ள, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை 5 பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கு பின்னணி பாடகி சுவர்ணலதாவின் வாய்ஸ் பொருத்தமாக இருக்கும். சுகன்யாவே பாடுவது போல் இருக்கும். இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்.

இவர் சிறந்த பரத நாட்டிய கலைஞர். இவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டுள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 75ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.

இதில் நடிகை சுகன்யா, அவருடைய ஆராதனையை மெய் மறந்து பாடினார். அவரது குரல் வளத்தை அனைவரும் பாராட்டியிருந்தனர். சிவலிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுகன்யாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே இல்லையாம். அவருக்கு கலாசேத்ரா போன்ற இசைக் கல்லூரியில் சேர்ந்து பேராசிரியையாக பணியாற்ற வேண்டும், பரதநாட்டியத்தை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. இதனாலேயே அவர் பலமுறை வாய்ப்புகள் வந்தும் அதை தவிர்த்ததாக தெரிவித்திருந்தார்.

பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், விளம்பரங்கள், அரசு நிகழ்ச்சிகள், வெளிநாடுகளில் நடக்கக்கூடிய விழாக்களில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார் சுகன்யா. ஜெர்மன் நாட்டில் கலாச்சார விழா போல, வெளிநாடு தூதரகங்களில் நடக்கக்கூடிய விழாக்களிலும் சுகன்யாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+