ஆதவனை ஆராயும் ஆதித்யா எல் 1.. ஜாதகத்தில் உள்ள சூரிய தோஷம் நீக்கும் சூரிய பகவான் ஆலயங்கள்
சென்னை: பாஸ்கரன், ஆதவன் என்று வணங்கப்படும் சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்படுகிறது. சூரியனை ஆராய ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ள நிலையில் சூரிய தோஷம் நீக்கும் புகழ் பெற்ற தலங்களை அறிந்து கொள்வோம்.
சூரியன் தன் தோஷம் போக்க 16 சிவத்தலங்கள் சென்று வழிபாடு செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சங்கரன்கோவில், தலைஞாயிறு, சூரியனார் கோவில், திருமங்கலக்குடி, வடஇந்தியாவில் உள்ள கோனார்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

முன்னொரு காலத்தில் தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டான். இதனால் அகோரவீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டான். தோஷமும் ஏற்பட்டது. சிலருக்கு ஜாதகத்தில் சூரிய தோஷம் இருக்கும். இதனால் நோய்கள் ஏற்படும். கண் பிரச்சினை அடிக்கடி ஏற்படும். சூரிய தோஷம் நீங்க பிரசித்தி பெற்ற சூரியன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்.
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதக ரீதியாகச் சூரியன் பலமிழந்து தோஷங்கள் அமையும் வாய்ப்புண்டு. அப்படி சூரியனின் தோஷத்தால் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் வழிபடத்தக்கத் தலம் ஞாயிறு ஶ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோயில். திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தலத்தில் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இவரை வழிபட்டு சூரியபகவான் பாவங்கள் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. அதனாலேயே சூரியனால் ஏற்படும் தோஷங்கள் போக்கும் பரிகார தலமாக விளங்குகிறது இந்த ஞாயிறு திருக்கோவில். சூரியன் வழிபட்டதால் இங்குள்ள தீர்த்தம் சூரிய புஷ்கரணி என்றே பெயர் கொண்டுள்ளது.
நவகிரங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாக சூரியனார் திருக்கோவில் விளங்குகிறது. சூரியன் என்றாலே ஒளி, வெப்பம். இந்த இரண்டையும் தாங்க இயலாது. ஆகவேதான் சூரிய பகவானின் இயற்கையான அதீத ஒளியையும் வெப்பத்தையும் மட்டுப்படுத்தி, மானிடர்கள் வழிபட ஏதுவாக, குரு பகவான் அவருக்கு எதிரில் அம்ர்ந்து அவரை சாந்த சொரூபியாக மாற்றுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில்1800 வருடம் பழமையானது. நவகிரகங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படுகிறது. இந்த தலத்தில் சூரிய பகவான், தனது துணைவியர்களான உஷாதேவியுடனும், சாயாதே வியுடனும் திரும ணக்கோலத்தில் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பான அம்சம். அது மட்டும் அல்லாது, அவரது உக்கிரத்தை நீக்கி, சாந்த சொரூபராக கருணை புரிவது மிகவும் அற்புதமான ஒன்றாகும்.
நவகிரகங்கள அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடியதும், நவகிரகமே மூலஸ்தானமாக அமையப் பெற்றதும் இந்த திருத்தலம். மற்ற நவகிரக தலங்களில், நவகிரகங்கள் பரிவார தேவதைகளாகவே காண முடியும். சங்க காலத்தில் பூம்புகாரில் ஒரு சூரியனார் கோவில், உச்சிக்கிழான் கோட்டம் என்று இருந்தது. அது கடலின் சீற்றத்தால் அழிந்து போனதாக வரலாறு. இப்பொழுது தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்த திருத்தலம்தான் பொலிவுடன் காட்சி தருகிறது. இது மிகவும் தொன்மை வாய்ந்தது. புராண வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதுவே நவகிரகங்களுக்கென அமைந்த தனித்தன்மை வாய்ந்தது. எனவேதான், ஏராளமான பக்தர்கள் வந்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிச் செல்லுகின்றனர்.
காலவ முனிவர் என்பவருக்கு தொழு நோய் ஏற்பட்டதால், தன் நோய் நீக்கி அருள் புரிய, நவகிரகங்களை வேண்டினார். அதனை ஏற்று, நிவர்த்தி செய்தனர். இதனை அறிந்த பிரம்மா மிகவும் சினம் கொண்டார். சிவபெருமானின் கட்டளைப்படி, ஒவ்வொருவருக்கும் அவரவர், பாவ புண்ணியங்களின் பலன்களை மட்டுமே கொடுக்குமாறு ஆணையிட்டு இருந்தோம். ஆனால், அதை நீங்கள் கீழ்படியாது, வரம்பு மீறி, வரம் தந்து கோட்பாட்டை மீறி செயல்பட்டு விட்டீர்கள். ஆகவே அனைவரும் பூலோகத்தில் தொழு நோய் பீடித்து உழலுவீர்களாக என்று சாபம் கொடுத்து விட்டார்.
சாபத்தின் பலனாக, பூலோகத்தில் உள்ள வெள்ளை எருக்கு வனம் வந்து அடைந்தனர். சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து தங்களுக்கு விமோசனம் தர வேண்டினர். சிவபெருமான் பிரதிட்சயமாகி, சாப விமோசனம் தந்து, அவர்களிடம், இந்த தலம் இனி, உங்கள் அருளிடமாக விளங்கும். உங்களை நாடி வரும் பக்தர்களில் எவர் பல துன்பங்களைச் சுமந்து, பொறுமை காத்து, உங்களை நாடி வந்து முறையிடுகிறார்களோ அவர்களுக்கு அனுகிரகம் செய்து நிவர்த்தி தருவீர்களாக என்று அருளினார் என்பதே இந்த தலத்தின் வரலாறு.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி, ஜென்மசனியால் பாதிக்கப்பட்டவர்களும், வேறு பிற நவகிரக தோஷம் உடையவர்களும், இந்த கோவிலுக்கு வந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதி காலையில், நவதீர்த்தகுளங்களில் நீராடி சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட அனைத்து தோஷமும் நீங்கப்பெறுவார்கள் என்பது நம்பிக்கை. சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை மற்றும் தோஷங்கள் உள்ளவர்களும் இங்கு வருகை புரிந்து, ஞாயிறு தோறும், சிறப்பு பூஜை பிரார்த்தனை செய்ய, காரியத்தடை நீங்கும்.

இதே போல மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறில் குற்றம் பொறுத்தநாதர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், 27வது தேவார தலமாக இக்கோவில் விளங்குகிறது. சூரிய பகவான் இங்கு வழிபட்டதால் தலைஞாயிறு' என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள இறைவனை வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும்.
ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சூரியன் கோயில் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, கட்டிடக்கலை அதிசயமும் கூட. நாட்டின் புகழ்பெற்ற மத மையங்களில் ஒன்றாக கணக்கிடப்பட்ட, பிரமிக்க வைக்கும் கோனார்க் சூரியன் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் மன்னர் நரசிம்மதேவாவால் கட்டப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் பூண்டு அருகே அமைந்துள்ளது சூரியன் கோயில் அல்லது சூரிய மந்திர். இதே போல பழங்கால நகரமான குவாலியரில் உள்ள சூரிய கோவில் புகழ்பெற்ற சூரிய தலமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications