நெல்லிக்காய் தரும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்க உதவும் வெற்றிலை.. தாறுமாறான பலன் தரும் எளிய பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் ஏதாவது குறைகள், தடைகள், இன்னல்கள் இருந்தால், எளிய பரிகாரங்கள் மூலம் அதனை சரி செய்யலாம். அந்தவகையில் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே சில பரிகாரங்களை செய்யலாம். குறிப்பாக வெற்றிலை பரிகாரம் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.

தெய்வாம்சம் நிறைந்த வெற்றிலைகள், ஆன்மீகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.. எந்த சுபகாரியத்தை துவங்க வேண்டுமானாலும், அதற்கு இந்த வெற்றிலைகளே முதன்மையாக தேவைப்படுகின்றன.. மிகப்பெரிய திருமண நிச்சயத்தைகூட, 2 வெற்றிலையில் உறுதி செய்து கொள்வார்கள்..

spirituality amla seeds vetrilai pariharam

அந்த அளவுக்கு வெற்றிலைகள் மங்களப் பொருளாகவும், செழுமையின் சின்னமாகவும் கருதப்படுகிறது.. வெற்றிலையிலுள்ள உள்ளார்ந்த பண்புகள் நேர்மறை ஆற்றலையும், தெய்வீக ஆசீர்வாதங்களையும் வழிபடுபவர்களுக்கு ஈர்க்கக்கூடியதாகவும் உள்ளது.

இந்த பச்சை நிறத்து இலைகள், அம்பாளின் அம்சமாகவும், தரித்ததும் சிவப்பு நிறம் கிடைப்பது, சிவம் என்றும், வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்வதியும், காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது.

அதனால்தான், வீட்டில் மனநிம்மதி குறைந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் வறுமை பீடித்தாலோ, அல்லது தீராத மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்தாலோ, அனைத்துக்கும் தீர்வாக வெற்றிலை பரிகாரம் உதவுகிறது.

வெற்றிலையை வாங்கி, அதை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து, வீட்டின் வாசலிலேயே தொங்கவிடுவதால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த இலையை அப்படியே காயவிடக்கூடாது. புதிதாக இலைகள் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

அதேபோல, பூஜையறையில், ஒரு தாம்பூல தட்டின்மீது ஒரே ஒரு வெற்றிலை, பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும்.. பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு ஏற்றி, உங்களது கோரிக்கைகள், பிரச்சனைகளை, பிரார்த்தனையாக சொல்லலாம். இதனால், உங்கள் கோரிக்கை நிறைவேறும்.

அதேபோல நெல்லக்காய் பரிகாரம் செய்யலாம்.. 6 நெல்லிக்காய்களை தனியாக எடுத்து, அதிலுள்ள சதைப்பகுதியை வெட்டி எடுத்து, நெல்லிக்காய் கொட்டைகளை மட்டும் தனியாக வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற சதுர துணியை விரித்து அதில் நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து ஒரு முடிச்சாக முடிந்து, வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்து விட வேண்டும். இதனால், உங்களது நிதி நிலைமை சீராகும்.. தடைபட்ட வருமானமும் தடையின்றி கிடைக்கும்.

அதேபோல, வருடத்திற்கு ஒருமுறை பழைய நெல்லிக்காய் கொட்டைகளை எடுத்துவிட்டு, புதிய நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து முடிச்சு போட்டு வைக்கலாம். பழைய நெல்லி கொட்டைகளை மனிதர்களின் கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.

அதேபோல, வெந்தயத்திலும் பரிகாரம் உண்டு.. ஒரு கண்ணாடி கிண்ணத்தில் வெந்தையத்தை போட்டு, கிசிசனில் வடகிழக்கு மூலையில் வைத்துவிட வேண்டும். வாரம் ஒரு முறை இந்த வெந்தயத்தை மாற்றி, புதிய வெந்தயம் வைக்க வேண்டும். பழைய வெந்தயத்தை ஓடும் நீரில் போட்டுவிடலாம. இப்படி செய்வதாலும் நிதி நிலைமை சீராகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+