தினந்தோறும் செம்பு தண்ணீர்.. பூஜையறையில் இந்த பொருளை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.. ஐம்பூதங்களின் சங்கமம்
சென்னை: பூஜை செய்வதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் உள்ளன.. அதேபோல, பூஜைகளின்போது செய்யக்கூடிய, மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும் ஆன்மீகத்தில் நிறைய தகவல்கள் சொல்லி வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒருசிலவற்றை காண்போம்.
பெண்கள் அனைவரும், காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்துவிட்டு, பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை செய்யும்போது கட்டாயம், மணியடித்தபடியே தரிசனம் செய்ய வேண்டும். இதனால், துர்சக்திகள் வீட்டை நெருங்காது...

அதேபோல, இரும்பு பொருள்களை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.. காரணம், இரும்பு யமனுக்கு உரியது.. அதுவும் இல்லாமல், இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்கித்து கொள்ள முடியாது என்பதால், வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
பஞ்சபூதங்கள்: பூஜை அறையில், பூஜையின்போது ஐம்பூதங்களும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.,. முதலாவதாக ஆகாயம் என்பது பூஜை அறையில் வியாபித்து இருக்கும்... நிலம் என்பது நம்மை தாங்கி நிற்பதாகும். விளக்கு ஏற்றும்போது நெருப்பு ஒளிர்கிறது. காற்று இயல்பாகவே எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.
ஆனால் தண்ணீர் மட்டும் பூஜையறையில் இருக்காது. எனவேதான், பூஜை செய்ய உட்காரும்போது, ஒரு பாத்திரத்தில் நிரம்ப நிரம்ப தண்ணீர் வைக்க வேண்டும். இதனால் ஐம்பூதங்களும் பூஜையறையில் நிறைந்திருக்கும்.
மூல மந்திரம்: எனவே, வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். அதிலும் விநாயகரின் பாதத்திற்கு அருகில் எப்போதும் சிறிது அரிசி வைத்திருக்க வேண்டும்... இதனால் வீட்டிற்குள் வறுமை அண்டாதிருக்கும். பஞ்ச பாத்திரத்திலும் தண்ணீர் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
அந்த தண்ணீரில் துளசி இலை, அல்லது ஏதாவது ஒரு பூவினை போட்டு வைக்கலாம்.. பூஜையறையில் உட்கார்ந்து இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்லி தியானம் செய்யும்போது, நாம் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். பிறகு அந்த தண்ணீரை குடிப்பதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
துர்சக்திகள்: அதேபோல, பூஜை செய்துவிட்டு மறுநாள் காலையில், அந்த தண்ணீரை கூரையில் ஊற்றிவிட்டு, மறுபடியும் புதிதாக தண்ணீர் வைக்க வேண்டும். இப்படி செய்து வருவதால், வீட்டிற்குள் துர்சக்திகள் அண்டாது.
பூஜைக்கு எப்போதுமே புத்தம் புதிய மலர்களையே பயன்படுத்த வேண்டும்.. வாடிய மலர்கள் இருந்தாலும் உடனடியாக அதை நீக்கிவிட வேண்டும். பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களை பூஜை அறையிலேயே வைத்துவிட வேண்டும்.. பூஜை நடைபெறாத சமயங்களில், பூஜையறையை ஸ்கிரீன் போட்டு மறைத்துவிட வேண்டும்.












Click it and Unblock the Notifications