வாசலில் மகாலட்சுமி.. தினமும் கோலம் போடுவதால் இத்தனை நன்மை? மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் தரும் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீட்டின் உள்ளே எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதே போல வீட்டு வாசலையும் நாம் சுத்தமாக வைக்க வேண்டும் என்பார்கள்.. வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் சமீபகாலமாகவே குறைந்து வருகிறது.. வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஆன்மீக பலன்கள் என்னென்ன தெரியும்? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
விடிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பேயே வாசலில் தெளிக்க வேண்டும்.. தண்ணீரில் மஞ்சள் கலந்து தெளித்துவிட்டு, அதற்கு பிறகு பச்சரிசி மாவால் கோலம் போடுவதே சரியான முறையாகும்..

கோலம் போடுவதற்கு முக்கிய காரணமே ஜீவராசிகளக்கு தர்மம் செய்வதாகும் பச்சரிசி மாவால் கோலமிட்டால், அவைகளை எறும்பு மற்றும் குருவி போன்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கும் என்று , நம்முடைய முன்னோர்கள் இந்த கோலம் போடுவதை நடைமுறைப்படுத்தினார்கள்.. அந்தவகையில், கோலம் போடுவது புண்ணியத்தை சேர்க்கும்.. உயிரினங்களுக்கு உணவளிப்பதால் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் ..
மும்மூர்த்திகள்
பசும் சாணம் தெளித்து மாக்கோலம் போட்டு, அதன்மீது காவி அடிப்பார்கள்.. இதன்மூலம் மும்மூர்த்திகளும் அந்த கோலத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம்... ஏனென்றால், பசு சாணத்தில் விஷ்ணு பகவான் வாசம் செய்வதாகவும், மாக்கோலத்தில் பிரம்மாவும், சிவபெருமானும் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்ல, கோலத்தின் மீது 8 திசைகளிலும் பூக்களை வைப்பது, அஷ்டதிக் பாலகர்களை குறிக்கிறதாம்.. எனவே, அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது . பூஜை அறையில் மட்டுமே பச்சரிசி மாவால் போட வேண்டும்
கண் திருஷ்டியால் எதிர்மறை சக்திகளும் விலகிவிடும்.. அத்துடன், செவ்வாய் கிரகம் தொடர்பான தோஷங்கள் இருந்தாலும் நீங்கிவிடுமாம்.. இதில், நவ கிரகங்களுக்கும் தனித்தனி கோலங்கள் உள்ளன..
அமாவாசை நாள்
எனினும் அமாவாசை நாளில் மட்டும் வீட்டு வாசலில் கட்டாயம் கோலம் போடக் கூடாது காரணம் அன்றைய தினம் நமது முன்னோர்கள் வீடு தேடி வருவார்கள்... நமது முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்க கூடாது என்பதால் அமாவாசை, திதி நாளில் மட்டும் கோலம் போடக்கூடாது.
ஒவ்வொரு கிழமைக்கும் கோலங்கள் உள்ளன.. ஞாயிற்றுக்கிழமைகளில் செந்தாமரை கோலம், திங்கட்கிழமைகளில் அல்லி மலர் கோலம், செவ்வாய்க்கிழமைகளில் வில்வ இலை கோலம், புதன்கிழமைகளில் மாவிலை கோலம், வியாழக்கிழமைகளில் துளசி மாடம் கோலம் ,வெள்ளிக்கிழமைகளில் தாமரை இலை கோலம், சனிக்கிழமைகளில் பவளமல்லி கோலம் போடலாம்.
மருத்துவ நன்மைகள்
கோலம் போடுவது சிறந்த உடற்பயிற்சியும் கூட.. கோலம் போடுவதால் எதிர்மறையான எண்ணங்களுடன் நம் வீட்டிற்குள் நுழைப்பவர்களின் எண்ணங்களை கூட மாற்றி அமைக்கும் சக்தி இருக்கிறதாம்.. .
சாணத்தை விரல்களில் கரைத்து தெளிக்கும்போது, விரல்களின் வழியாக பிரபஞ்ச சக்தி கிடைக்கிறது.. மிகச்சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.. சாணம் தெளிப்பதால், சின்ன சின்ன பூச்சிகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள், நோய்கள் அண்டாது.. இது ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது.
வாசலில் மகாலட்சுமி
எனவே ஆரோக்கியத்தை கோலம் என்ற மகாலட்சுமி குடும்பத்திற்கு தருகிறாள்.. தினம் தினம் கோலமிட்டு மலர் வைக்கும்போது, மகாலட்சுமி தேவியை நம் வீட்டிற்குள் வரவேற்கலாம்..
உட்கார்ந்தபடி கோலம் போடாமல், குனிந்தபடி கோலம் போடுவதே சிறந்த முறையாகும்.. அதேபோல, கோலத்தை தெற்கு திசையில் துவங்க கூடாது.. அதேபோல, தெற்கு திசையில் முடிக்குமாறும் போடக்கூடாது என்பார்கள்.












Click it and Unblock the Notifications