பணக்கார யோகம் பெறும் 4 ராசிக்காரர்கள்.. ஜஸ்ட் 4 மாசத்தில் அதிர்ஷ்டம் கொட்டும்.. பாபா வங்கா கணிப்பு
சென்னை: பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வங்கா 12 வயதில் மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்தவர்.. அந்த வயதிலிருந்தே எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக சொல்லி, அவைகளை கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார் பாபா வங்கா.. இவர் இறந்தபோதிலும், உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் அப்படியே நடந்து வருவதாக நம்பப்படுகிறது.. அந்தவகையில், 2025-ல் அடுத்து வரப்போகும் 4 மாதங்களில், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் வரப்போவதாக கணித்துள்ளாராம்.. பாபா வங்காவின் அந்த கணிப்புதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், பாபா வங்காவின் கணிப்பு ஒன்று இணையத்தில் வைரலானது.. அதில், 2025ம் ஆண்டில், 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போவதாக கூறப்பட்டது..

பாபா வங்காவின் கணிப்புபடி, 2025-ல் கும்பம், மேஷம், கடகம், மிதுனம், சிம்மன் என 5 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்.. மேஷ ராசிக்காரர்களுக்கு காசு பணம், அனைத்துமே உண்டாகும்.. சாதனை செய்வதற்கான ஆண்டாகும் என்றும் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.
கும்ப ராசிக்காரர்கள்
அதேபோல, கும்ப ராசிக்காரர்கள், 2025ம் வருடம், வாழ்வில் உச்சத்தை அடைவார்கள், சனி கிரகம் தைரியமாக உங்கள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு வலிமையை தருவதுடன், 2025ல் எல்லா கிரகங்களும் ஒன்றிணைந்து உங்களுக்கு நன்மையை செய்யும் என்று கணித்திருந்தார்.
ரிஷப ராசிக்காரர்களுக்கும், இந்த 2025ம் ஆண்டு நிதிச்சுமையை சரி செய்து செல்வத்தை பெருக்கும், ஆச்சரியப்படுத்தும். நிதி விவகாரத்தில் ஸ்திரத்தன்மை கிடைக்கும்... கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறும். மிதுன ராசிக்காரர்களுக்கு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக மட்டும் இல்லாமல் பொன்னான வாய்ப்புகளின் வாசற்கதவுகள் உங்களுக்காக திறக்கும். இதனால் உங்கள் நிதி நிலைமை உயரும். தனிப்பட்ட வாழ்வும் மேம்படும் என்றெல்லாம் கணித்து கூறியிருந்தார் பாபா வங்கா.
இந்நிலையில், 2025-ல் அடுத்து வரப்போகும் மாதங்களுக்கு 4 ராசிக்காரர்களுக்கு வெற்றி கிட்டும் என்று பாபா வங்கா கணித்திருப்பதாக கடந்த ஜுன் மாதமே செய்திகள் வலம் வந்திருந்தன.. அவை மீண்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் உள்ளதாவது:
மேஷ ராசிக்காரர்கள்
"செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள், புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் வரக்கூடும்.. எனவே, தீவிர கவனம் செலுத்தி முடிவுகள் எடுத்தால், மிகப்பெரிய மாற்றங்கள் வாழ்வில் ஏற்படும்..
தன்னுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்களை நம்பிக்கையுடன் சமாளித்து, தங்கள் துறையில் பெயர் மற்றும் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டிய காலம் இதுவாகும்.
எவ்வளவு பெரிய மாற்றம் உங்கள் வாழ்வில் நிகழ்கிறதோ, அவ்வளவு பெரிய பலன் உங்களை வந்து சேரும்.புதிய சொத்து, மனை, வீடு வாங்குவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஆழ்ந்த பகுப்பாய்வுக்கு பின் செய்யப்படும் முதலீடுகள், போதுமான லாபத்தை கொண்டு வரும்.
ரிஷப ராசிக்காரர்கள்
ரிஷப ராசிக்காரர்கள் கிரக வலிமை பெற்றவர்கள்.. அதிர்ஷ்டக்காரர்கள் என்றே சொல்லலாம்.. தொழில் துவங்குவதாக இருந்தாலும், இது நல்ல வாய்ப்பு.. ஒருசில சவால்கள் வந்தாலும், இன்னும் 6 மாதத்துக்குள் உழைப்புக்கான பலனை பெற்றுவிட முடியும்.
பூர்வீக சொத்துக்கள் வழியே உங்கள் வருமானம் பெருகும், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. நண்பர்கள், முதலீட்டாளர்கள் உதவியின் மூலம் உங்கள் தொழில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும். ஆனால், முதலீடுகளை முதலீடு செய்யும்போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.. அவரச முடிவுகள் நஷ்டத்தை தந்துவிடலாம்.
மிதுன ராசிக்காரர்கள்
மிதுன ராசிக்காரர்கள், புதிய வாய்ப்புகள் தேடி வரும்.. இதனால் பணம் சம்பாதித்து, நல்ல வருமானத்தை பெருக்கி, வாழ்க்கையில் உயர்ந்த நிலைமையை அடைய முடியும்..
சமூக மற்றும் பணி வலையமைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் குரு பகவானின் ஆதரவும் கிட்டும்.. புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், எதுவுமே தானாக வராது.. பல்வேறு முயற்சிகளின் மாற்றங்களை பொறுத்தே அமையும் என்பதால், ஒரே விஷயத்தை முயற்சிக்காமல், புதிய விஷயங்களை முயற்சிப்பதால் முன்னேற்றம் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்கள்
சிம்ம ராசிக்காரர்கள், பல வாய்ப்புகள் தேடிவரும்போது, பயன்படுத்தி கொள்ள வேண்டும்.. இதனால் பண இலக்கினை எட்டுவதுடன், தனிப்பட்ட நல்வாழ்வையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.. அத்துடன், ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கி கொண்டால், கூடுலான பொருளாதார வளர்ச்சியையும், தனிப்பட்ட வளர்ச்சியையும் எளிதில் அடைய முடியும்.
தன்னம்பிக்கை மட்டுமே அவர்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். பல வருட கால சிக்கல் தீர்வதுடன், குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடும் வகையில், அவர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications