Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேஷம் ராசிக்காரர்களுக்கு சூப்பர் அதிர்ஷ்டம்.. இவங்களுக்கு விரைவில் பணக்கார யோகம்.. கணித்த பாபா வங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வங்கா என்பவர், தன்னுடைய 12 வயதில் மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்தவர். அப்போதிருந்தே எதிர்காலத்தில் நடக்கக்கூடியவைகளை கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.. அவர் இறந்தபோதிலும், அவர் எழுதி வைத்த கணிப்புகள் அப்படியே நடந்து வருவதாக உலக மக்கள் நம்புகிறார்கள். அந்தவகையில், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் விரைவில் வரப்போவதாக கணித்துள்ளது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

4 ராசிக்காரர்களுக்கு, வரவிருக்கும் கால கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களை கணிப்புகளாக பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.

Spiritual Aries Sign Baba vanga

மேஷம் ராசிக்கார்கள்

அதன்படி, "செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷ ராசிக்காரர்கள், தைரியமும் உறுதியும் அவர்களை விரும்பிய இலக்குகளை அடைய உதவும். நல்ல முதலீட்டு தேர்வுகளை செய்வது தொழில் மாற்றம் செய்வது மற்றும் புதிய தொழிலை தொடங்கினால் இனி வரும் மாதங்களில் கணிசமான நிதி வளர்ச்சியை அடைவார்கள்.

சுக்ரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை ஈட்டுகிறார்கள். நிதி நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் ஆளும் கிரகம் எதிர்க்காலத்திற்கான விவேகமான முதலீடுகளை செய்ய தூண்டுவதால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 2025-ம் ஆண்டு கடினமான காலத்திற்கு பிறகு புதிய நிலைத்தன்மை உணர்வு கிடைக்கும்.

மிதுனம் ராசி

புதன் கிரகம் ஆட்சி செய்யும் மிதுன ராசிக்காரர்கள், தங்களது எதிர்க்காலத்தை திட்டமிடுவதில் சிறந்து விளங்குகிறார்கள். இனிவரும் மாதங்களில் இவர்களுக்கு நல்ல பலன் கிட்டும்.. எதிர்பாராத வாய்ப்புகள் மன தெளிவு கிடைப்பதுடன், எதிர்ப்பாராத விதமான வெற்றிகளும் கிடைக்கும்.

சூரியன் ஆளும் கிரகமான சிம்ம ராசிக்காரர்கள், இனி வரும் மாதங்களில் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.. பல நல்ல சாத்தியக்கூறுகளின் விளைவாக குறிப்பிடத்தக்க மாற்றமும் அவர்களின் வாழ்க்கையில் நிகழும்.. இதனால் நீண்ட கால நிதி இலக்குகளையும் எளிதாக அடைய முடியும். எனவே அடுத்த சில மாதங்களுக்குள் தொழில் முறை சாதனை மற்றும் நிதி ஆதாயம் மூலம் கோடீஸ்வரராக மாறக்கூடும் என்று கணித்துள்ளார்.

இந்த வருடம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பாபா வங்காவின்இந்த கணிப்புகள் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இன்னும் நாலு மாசம்தான்

இப்படி வரும் 5079-ம் ஆண்டு வரை பாபா வங்கா கணிப்புகளை எழுதி வைத்துள்ளாராம்.. இதில் இந்த வருடம் 2025ம் ஆண்டிற்குள், ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க மோதல்களால் நிலையற்ற தன்மை ஏற்படும்.

உலகம் முழுக்க பூகம்பங்கள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை பேரழிவுகள் உலகை உலுக்கும். மனிதர்கள் வேற்று கிரகவாசிளுடன் தொடர்பு கொள்வார்கள் என்றெல்லாம் பாபா வங்கா கணித்துள்ளதால், உலக மக்களுக்கு லேசான கலக்கமும் சூழ்ந்துள்ளது.

அதேபோல, வரும் 2028ல் மனிதர்கள் புதன் கிரகத்துக்கு செல்வார்கள். 2033ல் காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும். 2046ல் செயற்கை உறுப்புகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். 2066ல் அமெரிக்கா சுற்றுசூழலை அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடிக்கும். 2084ல் இயற்கை தன்னை புதுப்பிக்க தொடங்கும்.

விலங்குகள் மனிதர்களாவார்கள்?

2111-ல் மனிதர்கள் எந்திரங்களாக மாறுவார்கள். 2154ல் விலங்குகள் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி பெறும்.. 2170ல் பூமி வறண்டு பாலைவனமாகும்.. 2288ல் மனிதனுக்கும் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்புகள் வலுப்படும். 2341ல் விண்கல்லால் பூமிக்கு ஆபத்து வரும்.

3805ல் போர்களால் மக்கள் தொகை வீழ்ச்சி பெறும்.. 3854ல் மனித குலம் மறுபடியும் பழங்குடிமுறைக்கு திரும்பும் என 5079-ம் ஆண்டுவரை பாபா வங்கா கணிப்புகளை கணித்துள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+