கோயிலில் மணி அடிப்பது ஏன்? எத்தனை முறை மணியடிக்கலாம்? பூஜையில் மணி அடிக்கும்போது இதெல்லாம் முக்கியம்
சென்னை: கோவிலில் மணி அடித்து வழிபாடு நடத்துவதன் காரணம் என்ன தெரியுமா? வீட்டில் பூஜையறையில் மணியடித்து வழிபாடு நடத்தும்போது, ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? கோயிலிலுள்ள மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்ல என்ன காரணம் தெரியுமா? மணி அடிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகள் என்னென்ன தெரியுமா? எத்தனை முறை மணி அடிக்க வேண்டும்? இவைகளை பற்றி எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கோயில் மணி என்பது சாதாரண உலோகம் கிடையாது.. காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆனது.

மணி எப்படி அடிக்க வேண்டும்
"ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம் கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்." - என்ற மந்திரத்தை சொல்லி மணி அடித்தே
பூஜையை துவங்குவார்கள்.. தீயவை விலகி, சுபத்தினை தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும் என்பதே இந்த மந்திரத்தின் அர்த்தமாம்.
சாமி கும்பிடும்போது மணி அடிக்கும்போது, மனித உடலில் பல விதமான மாற்றங்களை ஏற்படுவதாக கூறப்படுகிறது.. மணி அடித்தால், ஏற்படும் ஒலியானது, அந்த பகுதி முழுவதையுமே நேர்மறை அதிர்வலைகளை உருவாக்கிவிடக்கூடியதாம்.. இதனால், நெகடிவ் அதிர்வலைகள் இருந்தாலும், அது மணியோசை ஒலிக்கும்போது நீங்குவிடும்.
அறிவியல் உண்மைகள்
அதுமட்டுமல்ல, உடலிலுள்ள மூளையும் சீராக செயல்பட தூண்டப்படுகிறது.. அதாவது மணியிலிருந்து வரும் சத்தமானது, நம்முடைய மூளைக்குள் 7 விநாடிகள் தங்கியிருப்பதாகவும், இதனால் 7 சக்கரங்களும் தூண்டப்படுவதாகவும் அறிவியல் கூறுகின்றன. அதாவது, 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அநாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றை தூண்டுகிறது. அத்துடன், மணியோசை கேட்டதுமே, மனதில் ஆற்றலும், புத்துணர்ச்சியும், ஏற்பட உதவுகின்றன.. .
ஆனால், கோயிலில் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது என்பார்கள்.. உதாரணத்துக்கு மணியை மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம். வேகமாக அடித்தால் தூபம், தீபமாகிறது என்று அர்த்தமாம்.. மணியை இரண்டு பக்கமும் அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்... இப்படி மணியின் ஒலிக்கிற ஓசையை வைத்தே, கோவிலில் நடப்பதை அன்றைய மகான்கள் தெரிந்து கொள்வார்களாம்.
கோயிலில் மணி அடிக்க காரணம்
மணி அடித்ததால், சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து நோய்க்கிருமிகளையும் அழிந்து, தூய்மையாகும்.. கோவில் மணியானது காதுகளுக்கு இதமான உணர்வை தந்து, மனதையும் ஆன்மாவையும் அமைதி பெற செய்கிறது.
எப்போதுமே பலரும் கோவிலுக்குள் சென்றதுமே மணியை அடிப்பார்கள். இதற்கு காரணம், கோயிலுக்குள் நுழைவதற்கு தெய்வத்திடம் அனுமதி கேட்பதாக அர்த்தமாம்..
அதேபோல, கோவிலை விட்டு வெளியேறும்போதும் மணி அடிப்பார்கள்.. இதற்கு காரணம், நம்முடைய உடலிலுள்ள கெட்ட சக்திகள் அனைத்தையும் வெளியேறிவிடும்.. நேர்மறை ஆற்றல் உட்புகுந்துவிடும்.. எனவேதான், கோவிலை விட்டு வெளியேறினாலும், உடலில் தங்கியுள்ள நேர்மறை ஆற்றலைப் பராமரிக்க மணியை அடிக்கக்கூடாது என்பார்கள்..
எத்தனை முறை மணியடிக்க வேண்டும்
அதேபோல, கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம், கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தாலோ, கடவுளை வணங்கிவிட்டு 5 முறை மணி அடிக்க வேண்டுமாம்..
வீட்டில் சாமி கும்பிடும்போதும் மணியை ஒலிக்க செய்ய வேண்டும்.. முககியமாக, மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக் கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.. பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.. ஆனால், எக்காரணம் கொண்டும் இடது கையால் மணியை எடுக்கவே கூடாது என்பார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications