தேங்காய் உடைப்பது ஏன்? கடனிலிருந்து மீள, கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்ட, நோய் தீர சிதறு தேங்காயா?
சென்னை: தேங்காய் உடைப்பதன் அர்த்தம் என்ன? தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருந்தால் என்ன செய்வது? தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால் என்ன அர்த்தம்? சிதறு தேங்காய் உடைப்பதன் நோக்கம் என்ன? சிதறு தேங்காயை உடைக்கும்போது செய்யககூடாத விஷயம் என்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எப்போதுமே ஆணவத்தில் நடந்து கொள்வோருக்கு அறிவு கண்ணை மறைத்துவிடும். இதைத்தான் நமக்கு தேங்காய் உணர்த்துகிறது.. ஆவணம் என்பது ஓட்டை குறிக்கிறது..

தேங்காய் உடைப்பதன் பொருள்
தேங்காயை உடைத்துவிட்டால், ஓடு என்ற ஆவணம் சிதறிவிழுந்து, அதனுள் தேங்காய் என்ற தூய்மையான அறிவை பெறலாம். தேங்காய் உடைக்கும் போது வெளியேறும் தண்ணீர், நம்முடைய மனதில் உள்ள பந்த பாசங்கள் விலகி ஓடுவதை உணர்த்துகிறது.
உலக மாயையாகிய ஓடைக் கடந்துதான் இறைவனின் அருளைப் பெற முடியும் என்றும், தேங்காய் உடைப்பதற்கான விளக்கமாக பெரியோர்கள் சொல்வார்கள். நாம் கடவுளை பிரார்த்தனையும், தியானமும் செய்து வழிபாட்டால் 3வது கண்ணாகிய ஞானத்தை பெறலாம் .. இதைததான் தேங்காயின் முக்கண் காட்டுகிறது.
கோயிலில் அர்ச்சனைக்கு தரும் தட்டு, மாறி வந்துவிட்டால் பதற்றமடைய தேவையில்லை.. அதை அபசகுனமாகவும் எடுத்துக்கொள்ள தேவைய்லலை.. ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை.
சகுனம் பார்க்க தேங்காய்
ஆனால், சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காயை வைத்து, அதாவது, தேங்காய் உடையும் முறையைப் பொறுத்து பலன்கள் அமையும் என்பார்கள்.. உதாரணத்துக்கு தேங்காய் சரிபாதியாக உடைந்தால், குடும்பத்திலுள்ள மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும். தேங்காயின் மேலுள்ள கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்துவிட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் பெருகும்.
ஒருவேளை கண்பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்துவிட்டால், அதுவரை குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள தீரும் என்று அர்த்தம். தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தம்... சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உள்ளே பூ இருந்தால், நீங்கள் நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.
சிதறு தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது
தேங்காய் அழுகியிருந்தால், நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப்போகுமே தவிர, மன உளைச்சல் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.. அதனால் நம் மீதான கண் திருஷ்டிதான் விலகும்.. ஆனால், தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்னைகள் உருவாகுமாம்.
அதேபோல விநாயகருக்கு உடைக்கப்படும் சிதறு தேங்காய் பற்றியும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.. இன்னல்கள், தோஷங்கள் நீங்கவும், செய்யும் செயலில் தடைகள் ஏற்படாமல் இருக்கவும் சிதறு தேங்காய் உடைத்து வேண்டிக் கொள்வார்கள்.. எனவே, சிதறு தேங்காய் உடைக்கும்போது, 1, 3 என்று ஒற்றைப் படையில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். ஆனால், பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிகள் வீட்டிலும் தேங்காய் உடைக்ககூடாது.
சிதறு தேங்காய் எண்ணிக்கை
பிள்ளையாருக்கு ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பதால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பார்கள்.. தொழில், அல்லது வேலை சம்பந்தமான செய்ல அல்லது சூநாயிலிருந்து மீள் வேண்டுமானால், 3 சிதறு தேங்காய் பிள்ளையாருக்கு உடைக்கலாம். கல்வி, ஞாத்தில் சிறந்துவிளங்க 5 சிதறு தேங்காய்களும், கடன் தொல்லையிலிருந்து விடுபட 7 சிதறு தேங்காய்களும், உடைக்க வேண்டும்.
புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுமானால், புதன் கிழமையில் தொடர்ந்து 9 வாரங்களுக்கு, 9 தேங்காயை உடைக்க வேண்டும். திருமண தடை என்றால், 11 சிதறு தேங்காய் உடைக்கலாம்.












Click it and Unblock the Notifications