நெய் விளக்கு நல்லது.. பிரம்ம முகூர்த்தத்தில் நெய் தீபம் ஏற்றினால் வரும் பாசிட்டிவ் மாற்றம்.. அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்ம முகூர்த்த நேரத்தில் நெய் விளக்கை ஏற்ற சொல்வது ஏன் தெரியுமா? நெய் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? நெய் விளக்கு பரிகாரங்கள் என்னென்ன? நெய் விளக்குகள் எண்ணிக்கைகளும், அதன் பலன்களும் என்னென்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஒவ்வொரு வீடுகளிலும் தீபத்தை எரிய விட வேண்டும் என்பார்கள்.. காரணம், கலைமகளான சரஸ்வதி தேவியும், தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். எனவேதான் தீபத்தை ஏற்றும்போது, 3 தேவிகளும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பப்படுகிறது.

Spirituality Nei deepam Nei Vilakku Pariharam

வீட்டில் நெய் தீபம் ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும்.. கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியை தரும்.. குடும்பத்திலுள்ள நிதி நெருக்கடி நீங்கும்.. அக்னி புராணத்தின்படி நெய் தீபம்தான் சிறந்தது என்கிறார்கள்.. அதேபோல சனாதன தர்மத்தின்படியும் வீட்டில் நெய் தீபம் ஏற்றுவதுதான் சகல நன்மைகளை தருமாம்..

நெய் தீபம் ஏற்றுவதன் பலன்கள் என்னென்ன?

விளக்குகள் தங்களை சுற்றியுள்ள காற்றிலிருந்து மென்மையான அதிர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான், தீபம் ஏற்றும்போது, அதன் நேர்மறை தாக்கம் வீடு முழுவதும் பரவுகிறது.. தீபம் எரியும்போது, சுற்றுச்சூழலில் பாக்டீரியா , வைரஸ்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனால் காற்று சுத்தமாகிறது..

சூரிய உதய நேரத்திலும், சூரியன் மறையும் நேரத்திலும் நெய் விளக்கு ஏற்றும்போது, சுற்றுச்சூழல் சீராகி, காற்று சுத்தப்படுத்தப்படுகிறது.. இதனால், குடும்பத்திலுள்ளவர்களின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது. அதனால்தான், பிரம்ம முகூர்த்த நேரத்திலும், மாலை நேரங்களிலும், வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட சொல்கிறார்கள். துளசிக்கு முன்னாலும் நெய் தீபம் ஏற்றலாம்..

தாங்க முடியாத கஷ்டம்

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டால், அருகிலுள்ள கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றிவைத்து, பிரகாரத்தை மூன்று முறை வலம் பெற வேண்டும். இதனால் இன்னல்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்தவகையில், கோயில்களில், அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில், நெய் தீபம் ஏற்றுவது பெருத்த பலனை தரும்..

அதேபோல, அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது. அதனால்தான், கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்..

நெய் விளக்குகளின் எண்ணிக்கைளும், பயன்களும்

இதில், 5 நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும். 9 நெய்விளக்குகளை ஏற்றினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்... 12 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி, முன்னெடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும்..18 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.. 27 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் திருமண தடை விலகும், புத்திய பாக்கியம் உண்டாகும்.

36 நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வந்தால் சகல தோஷமும் நீங்கும். 48 நெய்விளக்கு ஏற்றினால் தொழில் விருத்தியாகும்.. 108 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மனின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்பார்கள்.

21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகுமாம்.. தொழிலில் முன்னேற்றமின்மை, வியாபார தடங்கல்கள் இருந்தால், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும்.

தம்பதிக்குள் பிணக்குகள், விரிசல்கள் இருந்தால், 2 நாகங்கள் இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்ற வேண்டும். பிறகு, தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் அவர்களுக்குள் மனக்கசப்புகள் நீங்கி அன்னியோன்யம் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+