அதிர்ஷ்டம் தரும் சாலிக்கிராமம் கற்கள்.. பூஜை அறையில் இந்த கல் இருந்தாலே புண்ணியம்.. பலே சாளக்கிராமம்
சென்னை: மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தில் பெருமாளும் வாசம் செய்வார் என்பார்கள்.. அந்தவகையில், பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டிய முக்கிய அம்சம்தான் சாளக்கிராமம் ஆகும். இதனை எப்படி வழிபடுவது? இதை வழிபடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.
திருமாலின் அருவுருவ திருக்கோலல்தான் சாளக்கிராம கற்கள்.. சிவபெருமானின் அருவுருவத் தோற்றமாக எப்படி சிவலிங்கம் இருக்கிறதோ, அதே போலவே, திருமாலின் அருவுருவ திருக்கோலமாக சாளக்கிராமக் கற்கள் பார்க்கப்படுகின்றன.

திருமால்: அதனால்தான், திருமலை திருப்பதியில் நடக்கும் பூஜைகளில் சாளகிராமத்திற்கு மிக மிக முக்கியமான பங்குண்டு. திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவம் உள்ளதால், இந்த சாளக்கிராம கல்லை தினமும் வழிபாடு செய்து பலனை பெறலாம் .
கரிய நிற சாளக்கிராம கல்லை, கண்ணனாகவும் வழிபடும்போது கிடைக்கும் சிறப்புகள் ஏராளம். ஆனால், இந்த கற்கள் பெரும்பாலானோருக்கு கிடைத்துவிடுவதில்லை.. தினமும் சாளக்கிராம கற்களுக்கு பூஜை செய்து வரும்போது, நம்முடைய மனம் தெளிவடையும்.. சாளக்கிராமத்தில் காணப்படும் உருவங்களின் தரிசனமானது, கொலை பாவத்தைக்கூட போக்கும் சக்தி படைத்ததாம்.. சாளக்கிராம பூஜை செய்பவர்களை எமபயம் அண்டுவதில்லை..
சாளக்கிராம கற்கள்: எப்படி பூஜை செய்யலாம்: சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் தொட்டு வழிபடலாம் என்றாலும், சாளக்கிராம கற்கள் இருக்குமிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
சாளக்கிராம கற்களுக்கு சந்தனம் பூசி, மலர் சூடி, தீப, தூப ஆராதனைகள் செய்து, நைவேத்தியமும் படைத்து வழிபடலாம். இப்படி வழிபடுவதால், அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்குமாம்.. அதுமட்டுமல்ல, சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால், யாகமும், தானமும் செய்த பலன் கிடைத்துவிடும் என்பார்கள்.
தீர்த்தங்கள்: 12 சாளக்கிராம கற்களை கொண்டு வழிபாடு செய்தால், 12 கோடி சிவலிங்கங்களை வைத்து, 12 கல்ப காலம் பூஜை செய்த பலன், ஒரே நாளில் கிடைக்கப்பெறும்... சாளக்கிராமத்திற்கு செய்யும் அபிஷேக தீர்த்தத்தையும் தலையில் தெளித்து, பருகினால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்துசேரும் என்பார்கள்.
சாளக்கிராம கற்களில் விரிசல்கள் ஏதாவது இருந்தால், அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி பூஜைக்கு பயன்படுத்தலாம். பூஜை செய்வதுடன் மட்டுமல்ல, அந்த கல்லைப் பற்றி நினைத்தாலே, நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடுமாம்..
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications