ஆடி 18-ல் அதை மட்டும் பெண்கள் செய்யாதீங்க.. ஆடிப்பெருக்கில் தாலி பிரித்து மாற்ற சரியான நேரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் ஆடி 18 வரவுள்ளது.. இந்த விசேஷ நாளில் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. இந்த ஆடிப்பெருக்கின்போது சில முக்கியமான விஷயங்களையும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல, ஆடிப்பெருக்கு தினத்தன்று தாலி மாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அந்தவகையில், ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்..

ஆறுகள் பாயும் கரையோர பகுதிகளில், மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.. இந்த படித்துறைகள் 18 படிகளை கொண்டதாக இருக்கும். எனவேதான் ஆடி 18 என்று மிகச்சிறப்பாக காவிரி கரைகளில் கொண்டாடப்படுகிறது.

Spirtuality Aadi 18 Aadi Perukku 18

ஆடிப்பெருக்கு சிறப்புகள்

இந்த ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்கினால் , சகல வளமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்..

குறிப்பாக, கன்னிப்பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் வழிபடும்போது, விரைவில் திருமணம் நிச்சயமாகும்.. அதேபோல, ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் தங்களது புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்களாக இருந்தால் தாலி பெருக்கி போடுவார்கள்... இதன்மூலம் கட்டிய கணவரின் ஆயுள் பெருகுமாம்.. அதேபோல, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வேண்டிக் கொள்ளும்போது, குழந்தைப்பேறு உண்டாகும்.

தாலி மாற்ற இதுதான் நல்ல நேரம்

அந்தவகையில், வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு வருகிறது. விசாகம் நட்சத்திரமானது காலை 7:24 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் காலை 9:50 மணி வரை இந்நன்னாள் நீடிக்கிறது.

இதில் தாலி மாற்றுவதாக இருந்தால், காலை 7.45 முதல் 8.45 வரை, மாலை 3.15 முதல் 4.15 வரை மாற்றிக் கொள்ளலாம்.. எனினும், புதுமண தம்பதிகள் மதியம் 12 மணிக்குள் தாலி மாற்றிக்கொள்வது சிறப்பு.. அதாவது, ராகு காலமும், எமகண்டமும் மதியத்திற்கு பிறகே வருவதால் காலையில் வரும் நல்ல நேரத்திலேயே தாலியை மாற்றிக்கொள்வது நல்லது என்கிறார்கள்.

புதுமண தம்பதிகள், கடவுளிடம் பிரார்த்ததுமே,பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். புதிதான மஞ்சள் கயிற்றை, அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கணவன் மனைவிக்கு கட்டவேண்டும். இப்படி ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் என்பார்கள்..

ஆடி 18 செய்ய வேண்டியது

கழுத்தில் தங்கத்திலேயே தாலி சரடு அணிந்திருந்தாலும்சரி, வெறும் கயிறு அணிந்திருந்தாலும்சரி, சரட்டில் மஞ்சள் கயிறு இருப்பதும் அவசியம். கயிறு மட்டுமே கட்டியிருந்தாலும், இந்த நாளில், புதிய சரடு மாற்றிக்கொள்ளலாம். எனினும், நல்ல நேரம் பார்த்துதான், சரடு மாற்ற வேண்டும்.

இந்த ஆடி 18 நாளன்று, பெண்கள் கருப்பு நிற உடைகளை அணிய கூடாது.. அன்றையதினம், மங்களகரமான சிவப்பு, மஞ்சள் நிறம் அல்லது திருமண புடவையை அணிந்து கொள்ளலாம். வளையல்களை அணிந்து, மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும்.

ஆடிப்பெருக்கில் செய்யக்கூடாதது

ஆடி 18 அன்று நாளில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது.. ஆனால், பெண்கள் அன்னதானம் தருவது சிறப்பு.. அன்னதானம் வழங்க முடியாவிட்டாலும், வெறும் தண்ணீராவது தரலாம்.. அதேபோல, சுமங்கலி பெண்கள் 3 அல்லது 5 பேருக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் தரவேண்டும்.

அதேபோல ஆடிப் பெருக்கு தினத்தன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது.. அவ்வாறு வாங்க முடியாதவர்கள், மகாலட்சுமியின் ஸ்வரூபமான சிறிய குண்டு மஞ்சளாவது வாங்க வேண்டும்.. இதுவே தங்கத்துக்கு இணையானதாகும்.. மேலும், கல் உப்பு வாங்கி வீட்டில் ஜாடியில் நிரப்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+