Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்மேற்கு மூலையின் முக்கியத்துவம்.. வீட்டில் பணம் புழங்க உதவும் வாசனை பரிகாரம்.. அருமை வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வீட்டின் வாஸ்து அமைப்பு சரியாக இருந்தாலே, அந்த குடும்பத்தில் வறுமை அண்டாது என்பார்கள்.. உதாரணத்துக்கு வடகிழக்கில் கண்டிப்பாக சமையல் அறை இருக்க கூடாது என்பார்கள்.. தவறான இடத்தில் உள்ள சமையல் அறை, ஆரோக்கியத்தில் கெடுதலை உண்டுபண்ணிவிடும்.. எனவே,சமையல் அறை என்றாலே அது தென்கிழக்கு திசையில் தான் இருக்கவேண்டும் என்பார்கள்.. அந்தவகையில், தென்மேற்கு திசையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

தென்மேற்கு திசை என்பது நேர்மறை ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கக் கூடிய திசையாக உள்ளது. எனவேதான், தென்மேற்கு திசை எனப்படும் நைருதி மூலை சரியான வாஸ்துபடி அமைக்க வேண்டும் என்கிறார்கள்..

Television southwest corner pariharam

அந்தவகையில், எப்போதுமே பெரிய ஜன்னல், திறப்பு என எதையுமே தென்மேற்கு திசையில் வைக்கக்கூடாது என்பது.. தென் மேற்கு திசையில் வீட்டின் தலைவாசல் கதவு இருக்க கூடாது. வடகிழக்கு எவ்வளவு வெட்ட வெளியாய் இருக்க வேண்டுமோ அதேபோல் தென்மேற்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஈசான்யம் பள்ளம்

ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் இருக்க வேண்டும் என்பார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

சூரிய மண்டலத்தின் அங்கமான பூமி 23.5 டிகிரி கிழக்கு பக்கம் சுழல்கிறது. இதனால்தான் சூரியனை பூமி நீள்வட்ட பாதையில் சுற்றி வர முடிகின்றது. சூரியனை பூமி சுற்றும்போது, அதன் ஈசான்ய மூலையான வட கிழக்கு சற்று தாழ்ந்தும், தென் மேற்கு பகுதியான குபேர மூலை சற்று உயர்ந்தும் இருக்கும். எனவேதான், வீடு கட்டும் போது வீட்டின் தென் மேற்கு மூலையை உயரமாகவும், ஈசானிய மூலை சற்று தாழ்வாகவும் வைத்து கட்டுவது அவசியம் என்கிறார்கள்.

இப்படி கட்டுவதால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.. ஆரோக்கிய குறைபாடு விலகும்.. அதேபோல, தென்மேற்கும் மேற்கும், உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் ஏற்படும்..

புற்றுநோய் - உயிரிழப்பு

ஒருவரின் வீட்டில் தென்மேற்கு பகுதியில் வாஸ்து தவறாக இருந்தால் துர்மரணம்கூட ஏற்படலாம்.. அல்லது ஆபத்தான புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்படலாம்.. எனவே, வீட்டின் தென்மேற்கு திசை உயரமாகவும், வடகிழக்கு பகுதியை தாழ்வாகவும் திறந்த வெளியாகவும் இருக்கும்படி, பார்த்து கொள்ள வேண்டும்.. தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

தென்மேற்கு மூலையில் கதவு ஜன்னலோ இருக்கும் பட்சத்தில் அந்த கதவில், அந்த ஜன்னலில் விநாயகர், ஹனுமன், ஓம், சுவஸ்திக், என ஏதாவது ஒரு கடவுள் படத்தை மாட்டி வைப்பது நன்மையை தரும்.

கிண்ணத்தில் வாசனை பொருள்

குபேர மூலை என்று சொல்லக்கூடிய இந்த திசை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். துர்நாற்றம் வராமல், நறுமணம் வீசும் வகையில் இருக்க வேண்டும்.. எனவே, தவறாமல் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம். அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை அல்லது கிராம்பு போட்டு வைக்கலாம். எந்த அளவுக்கு இந்த பகுதியில் வாசனை அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

அதேபோல, வீட்டில் பணப்பிரச்சனை இருந்தால், ஒரு சிவப்பு துணியில் 5 ரூபாய் நாணயத்தை முடிச்சாக கட்டி, அதை உங்களது உள்ளங்கையில் வைத்து பணக்கஷ்டம் தீர்ந்து, நிதி நெருக்கடி சீராக வேண்டும் என்று பிரார்த்திக் கொள்ளுங்கள். பிறகு இந்த முடிச்சை தென்மேற்கு மூலையில் வைத்து, ஊதுவத்தி தினமும் காட்டி வந்தால், பண சிக்கல் மெல்ல குறையுமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+