கிச்சனில் மருந்துகளை வைக்கலாமா? மாத்திரைகள் சாப்பிட உகந்த திசை இதுதான்.. பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீட்டில் மருந்து, மாத்திரைகளை எந்த திசையில் வைத்திருக்க வேண்டும்? மருந்து எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்? என்பது குறித்தெல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.

வீடுகளை பொறுத்தவரை, ஆரோக்கியம் தொடர்புடையதாக கருதப்படுவது வடகிழக்கு மூலைதான்.. எனவே, மருந்து மாத்திரைகளை இந்த பகுதியில்தான் வைத்திருக்க வேண்டுமாம்.

medicine vastu tips

சரியான திசை: இதனால், உட்கொள்ளும் மருந்துகளின் செயல்பாடு வீரியத்துடன் விளங்கும்.. அத்துடன் விரைவில் நோய்களிலிருந்தும் விடுபடலாம்.. ஒருவேளை இந்த திசையை தவிர்த்தால், வடக்கு மற்றும் வடகிழக்கிலும் மருந்துகளை வைக்கலாம்.

வடமேற்கில் மருந்துகளை வைப்பதால், பெரிதாக தீங்கு குடும்பத்தில் அண்டாது. ஆனால், குணமடைய காலதாமதமாகும்.. ஆனால், எக்காரணம் கொண்டும், தென்கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் மருந்துகளை வைக்கக்கூடாது... மற்ற திசைகளில் மருந்துகளை வைத்தால், எதிர்மறையான விளைவுகள் வரக்கூடுமாம்.

தன்வந்திரி: எப்போதுமே, வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இதனாலும் குடும்பத்தில் ஆரோக்கியம் குறையலாம். எனவே, அடிக்கடி மருந்து வைக்கும் இடத்தை சுத்தம் செய்து, மஞ்சள் நிறத்தில் தன்வந்திரி சுவாமியின் போட்டாவை வைக்கலாம்.. அல்லது நீல நிறத்தில் ஒரு ஸ்வஸ்திகாவை வைக்கலாம்.

அதேபோல, மருந்துகளை கட்டிலுக்கு அருகே அல்லது தலைக்கு மேல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது... இது தோஷத்தை உண்டுபண்ணிவிடுமாம்.. மருந்துகளை எப்போது சாப்பிட்டாலும், மேற்கு பக்கம் பார்த்து சாப்பிடுவதே சிறந்தது..

தீக்காயங்கள்: அதேபோல் மருந்துகளை பூஜையறையிலும் வைக்கக்கூடாது.. சமையலறையிலும் வைக்கக்கூடாது.. சிலர் தீக்காயங்கள் உள்ளிட்டவைகளுக்காக முதலுதவி பெட்டிகளை கிச்சனில் வைத்திருப்பார்கள். இதனால், குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. எனவே சமையறையில் மருந்துகளை வைப்பதும், அவற்றை உட்கொள்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.. சமையலறை வடகிழக்கில் அமைத்தால் பெண்களின் உடல்நலன் பாதிக்கப்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+