பழைய துணியை தானம் தரலாமா.. பயன்படுத்தாத துணிகளை இப்படி செய்யவே செய்யாதீங்க.. கஷ்டம் அதிகமாகிடுமாம்
சென்னை: வீட்டிலிருக்கும் பொருட்கள் பழையதாகிவிட்டாலோ, அல்லது பயன்படுத்தாத பொருட்களை என்ன செய்ய வேண்டும்? இதற்கும் முன்னோர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை சொல்லி வைத்துள்ளனர். இந்த சாஸ்திரங்களை சரியாக கடைப்பிடித்தாலே நம்முடைய வீடுகளிலுள்ள தரித்திரங்களை எளிதாக விரட்டிவிடலாம் என்கிறார்கள்.
வீட்டில் விளக்கேற்றும்போது சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தீபத்திரியை மாற்றும்போது பழைய திரியை, குப்பையில் போடக்கூடாது. இந்த திரிகளை சேர்த்து வைத்து, ஏதாவது ஒரு நாளில், குடும்ப உறுப்பினர்களை, கிழக்கு பார்த்து உட்கார வைத்து, திருஷ்டி கழிக்கலாம்.

பழைய திரிகள்: அதேபோல, சாமி படம் போட்ட பழைய காலண்டரை கோவிலிலோ அல்லது மரத்தடியிலோ கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். சிலர் கீழே போட மனமில்லாமல் வீட்டிலேயே வைத்திருப்பார்கள். அல்லது பழைய காலண்டர் மீதே புது காலண்டரையும் மாட்டி விடுவார்கள்.
ஆனால் இவைகளை செய்தால், நிறைய சிக்கல் குடும்பத்தில் முளைத்துவிடுமாம். பழைய காலண்டர், கிழிந்த காலண்டர் எதுவானாலும், குப்பையில் போடாமல் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.
முன்னேற்றம்: அதேபோல, பழைய துணிகள் வீட்டில் நிறைய சேர்ந்துவிட்டால், முதலில் அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் அவைகளை சேர்த்து வைத்தால், எதிர்மறை சக்திகள் பெருகிவிடும். முன்னேற்றத்திற்கும் தடையாகிவிடும்.
பழைய துணிகளே என்றாலும் அவைகள் கிழியாமல் இருந்தால், பிறருக்கு தானமாக கொடுக்கலாம். ஆனால், உடுத்தும் துணிகளை துவைக்காமல் தானம் தரக்கூடாது.. கிழிந்த துணிகளையும் தானம் கொடுக்கக் கூடாது.
பழைய துணிகள்: துவைத்த துணிகளே என்றாலும், அதை கசங்கி போய் பிறருக்கு தரக்கூடாது. அதை மடித்து ஏதாவது ஒரு பேப்பர் அல்லது அட்டையில் வைத்து தானம் தரவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் தானம் கொடுக்கும்போது, அதை வாங்குபவர்கள் மனம் குளிர வேண்டும்... அதேபோல, பயன்படுத்தப்படாத பழைய துணிகளை குப்பையில் போடக்கூடாது.. இதனால் தோஷங்கள் இன்னும் அதிகமாகிவிடும்.. எனவே, பழைய துணிகளை ஒன்றுசேர்த்து, நெருப்பில் போட்டு கொளுத்திவிட வேண்டுமாம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications