மொட்டை மாடியில்.. தவறியும் இந்த பொருளை வைக்காதீங்க.. வீட்டு மாடியில் இது இருந்தாலே பணகஷ்டம் வருமாம்
சென்னை: நம்முடைய வீடுகளிள் ஒவ்வொரு இடத்திலும், உபயோகிக்க வேண்டிய பொருட்கள் என்ன? கழித்து வெளியேற்ற வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பது குறித்து வாஸ்துவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அதை முதலில் நிவர்த்தி செய்துவிட வேண்டும். வீட்டிலுள்ள சமையலறை, படுக்கையறை, பூஜையறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

பொருட்கள்: அதுபோலவே, பயன்படுத்தும் பொருட்களின் திசையை எப்படி வைக்க வேண்டும், அதன் பலாபலன்கள் என்னென்ன என்பதெல்லாம் குறித்தும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது. அப்படியே எதிர்பாராமல் அமைந்துவிட்டால், தண்ணீருள்ள பகுதிகளில் மண்ணை தோண்டி, 1 ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டுமாம்.
அதேபோல, அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை வீட்டிற்குள் அடைத்து வைக்கக்கூடாது.. உடைந்த பானைகளை தரையிலேயே வைத்திருக்கக்கூடாதாம். துடைப்பத்தையும் தரையில் வைக்கக்கூடாது.. பழைய கடிகாரங்கள், உடைந்த, சேதமடைந்த பொருட்களையும் வைத்திருக்கக்கூடாது.. அப்படி வைத்திருந்தால், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்..
மொட்டை மாடி: அதுபோலவே, மொட்டை மாடியிலும் உடைந்த மரச்சாமான்களை, உடைந்த நாற்காலிகளை, சேதடைந்த மேஜைகளை வைத்திருக்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
இப்படிப்பட்ட பொருட்களை மொட்டை மாடியில் வைத்திருந்தால், பணப்பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுமாம்.
அதேபோல, சிலர் வீடு கட்டிமுடித்ததுமே, மீதமான கம்பங்கள், மூங்கில்களை மொட்டை மாடியில் போட்டு வைத்திருப்பார்கள்.. இதுபோல் வைத்திருந்தால், வீட்டில் தகராறு ஏற்பட்டு குடும்ப உறுப்பினர்களின் மன அமைதி பறிபோகும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்..
பழைய பொருட்கள்: பழைய உலோகப் பொருட்கள், கம்பிகள், கருவிகள், உடைந்த மண் பாத்திரங்கள் எதுவுமே மொட்டை மாடியில் வைத்திருக்கக் கூடாது.. வீட்டின் மொட்டைமாடி சனி பகவானின் காரணியாக கருதப்படுகிறது.. எனவே, மாடியை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பைகளை குவித்து வைத்திருந்தால், எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழையவிடாமல் தடையை ஏற்படுத்திவிடும்..
அதேபோல, மொட்டை மாடியில் துடைப்பம், மரப்பொருட்களையும், பழைய நியூஸ் பேப்பர்களையும் சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.. அதேபோல துணி காயவைப்பதற்கு கயிறு கட்ட நேரிடும்.. இந்த கயிற்றை கட்டிய பிறகு, ஒரு பக்கத்தில் கயிற்றின் மூட்டையை விட்டுவிடக்கூடாது.. வாஸ்துப்படி, கயிற்று மூட்டையை வைப்பது அபசகுணமாக கருதப்படுகிறது.
முட்செடிகள்: மணம்தரக்கூடிய செடிகளை, மொட்டை மாடியில், தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம்.. ஆனால், முள் செடிகளை மட்டும் வளர்க்கக்கூடாது.. இதனாலும், குடும்பத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டில் நிம்மதியே பறிபோய்விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
வீட்டில் வளர்க்கக்கூடிய வாஸ்து செடிகள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது.. இதனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகுமாம்.












Click it and Unblock the Notifications