வாழை இலை சருகு இருந்தாலே வீட்டில் நிதி நிலைமை சீராகுமே.. வாழையிலையில் இப்படியொரு பரிகாரமா? சூப்பர்ல
சென்னை: வீட்டிற்குள் பண வரவு வேண்டும் என்றாலோ அல்லது சேமிப்பு அதிகமாக வேண்டும் என்றாலோ, மகாலட்சுமியின் ஆசி மிகவும் முக்கியம்.. பெண்களை மகாலட்சுமியாக பாவிக்க காரணமும், அவர்கள் சேமிப்பை பன்மடங்கு பெருக்குவார்கள் என்பதால்தான். அந்தவகையில், நிதி சிக்கலை தீர்த்து, செழிப்பை பெருக்கக்கூடிய வாழை இலை பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
வாழை இலையை பொறுத்தவரை நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை.. இதய நோய்கள், புற்றுநோய், அல்சர், தோல் நோய் உள்ளிட்ட நோய்களை வரவிடாமல் தடுக்க செய்யக்கூடியவை இந்த வாழை இலைகள். வாழை இலையில் சுடச்சுட சாப்பிடும்போது, ஆயுள் பெருகும். இதற்கு காரணம், இலையின் பச்சைத்தன்மைதான்.. இந்த பச்சை தன்மைக்கு குளோரோபில் என்பார்கள்.. நாம் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணமடைய செய்து, வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற்றும் தன்மை இந்த வாழை இலைக்கு உண்டு.

அதேபோல, ஆன்மீகத்திலும் வாழை இலைக்கு முக்கியத்துவம் உண்டு.. வாழையிலையில் படையல் செய்துதான், கடவுள்களுக்கு படைக்கப்படுகிறது. லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்யும்போது, மொத்த பணக்கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம்.. விநாயகருக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்யும்போது, குடும்ப கஷ்டங்கள் நீங்கி, புதன் தோஷத்திலிருந்தும் விடுபடலாம்..
திருமண தடை: அதேபோல, திருமண தடைகள் நீங்க வேண்டுமானால், வீட்டிலுள்ள நிதி சிக்கல் தீர வேண்டுமானால், விஷ்ணுவுக்கு வாழையில் அர்ச்சனை செய்ய வேண்டும். ஏனென்றால், வாழையின் தண்டில், மகாவிஷ்ணுவும் லட்சுமி தாயாரும் வசிப்பதால், விஷ்ணுவுக்கும் வாழை இலையில் அர்ச்சனை செய்யும்போது, சகல ஆசிகளையும் பெற முடியும்.
எப்போதுமே, வாழை இலையை அப்படி கீழே வைத்து கடவுள்களுக்கு படைக்கக்கூடாது.. படையலுக்கு முன்பு, சிறிய கோலமிட்டு, அந்த கோலத்தின் மீது வாழை இலையை பரப்பி, படையல் போட வேண்டும்.. முக்கியமாக, இலையின் காம்பு பகுதி கடவுளையும், அதன் நுனிப்பகுதி நம்மையும் பார்த்தபடி இருக்க வேண்டும். கடவுளை விட நாம் உயர்ந்தவர் கிடையாது என்பதை உணர்த்தவே இவ்வாறு இலை போடப்படுகிறது.
வாழையிலை: அதேபோல குடும்ப சிக்கல் தீர வேண்டுமானால், வாழை இலை சருகில் பரிகாரம் செய்யலாம். இதற்கு தலை வாழ இலையை நன்றாக காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதிகாலையில் குளித்து முடித்ததுமே, பூஜையறையில் காய்ந்த வாழை இலையில் 9 ஒரு ரூபாய் நாணயம், 9 கிராம்பு, 9 ஏலக்காய்களை வைத்து சுருட்டி, ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த முடிச்சை, மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து, குடும்ப வறுமை தீர்ந்து, பணவரவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, பீரோவிலோ அல்லது சமையலறையிலோ யாரும் பார்க்காத இடத்தில் வைத்து விட வேண்டும்.
பரிகாரம்: இதற்கு பிறகு அதை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இதற்கு பிறகு, வீட்டில் பணவரவு மெல்ல தானாகவே அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்த பரிகாரத்தை எந்த நாளிலும் செய்யலாம். ஆனால், மாதவிடாய் நேரத்தில் பெண்கள் செய்யக் கூடாது. யாருக்கும் தெரியாமல், தனிநபராய் மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நிதி நிலைமை சீராவதுடன், கடன் இருந்தாலும் அது விரைவில் அடையுமாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications