பழைய அகல் விளக்குகளை கார்த்திகை தீபத்திற்கு ஏற்றலாமா? புதிய மண் விளக்கை இப்படி யூஸ் பண்ணுங்க.. வாவ்
சென்னை: நம்மிடமுள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை படரவிடுவதுதான் தீப வழிபாட்டின் நோக்கமாகும். அந்தவகையில், கார்த்திகை தீபத்திற்கு பழைய அகல் விளக்குகளை ஏற்றலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதேபோல எத்தனை விளக்குகளை ஏற்றலாம் என்றும் குழப்பம் இருக்கலாம். அதை பற்றி பார்ப்போம்.
கார்த்திகை தீபத் திருநாளில், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு, அனைத்து வீடுகளிலும் ஏற்றுவது வழக்கம். ஆனால், கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தால், ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு வந்து சேரும்.

தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் உறைந்துள்ளதால், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகமாக உள்ளது..
மண் அகல் விளக்கு: கார்த்திகை தீபத்திற்கு வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கையும் ஏற்றலாம். ஆனாலும், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது கூடுதல் மகிமையாகும். காரணம், மண் விளக்கில் தீபம் ஏற்றும்போது, செல்வ வளம் பெருகும் என்பார்கள். ஏனென்றால், இதன் அடிபாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும் நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம்.
எனினும், பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருந்தால், அவைகளிலும் தீபம் ஏற்றலாமா? என்ற சந்தேகம் எழலாம். பொதுவாக புதிய அகல் விளக்குகளை வாங்கி, தீபம் ஏற்றுவது வழக்கமாகும். ஒருவேளை வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தால், அவைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, துணி துவைக்கும் சோப்பு தண்ணீரையும் அதில் கொட்டி கலக்க வேண்டும்.
பழைய விளக்குகள்: இந்த சோப் நீரில் விளக்குகளை நன்றாக ஊற வைக்க வேண்டும். இதனால், பழைய எண்ணெய் பிசுக்குகள் இருந்தாலும் நீங்கிவிடும். இதற்கு பிறகு பழைய விளக்குகள் அனைத்தையும் நன்றாக தேய்த்து கழுவி காய வைத்து பயன்படுத்தலாம்.
ஒருவேளை புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தால், அவைகளையும் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்துவிடாமல் இருக்கும். 4 மணி நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவி, காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காய்ந்த மண் அகல் விளக்குகளில், திரி போடும் இடத்தை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
எந்த முகம்: விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். 2 முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்.. 3 முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும். 4 முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். 5 முகம் ஏற்றினால், சகலநன்மையும், ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள்.
அதேபோல விளக்கின் திசையையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்க வேண்டுமானால் கிழக்கு திசையில் தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர வேண்டுமானால், மேற்கு திசையிலும், திருமணத்தடை நீங்க வேண்டுமானால் வடக்கு திசையிலும் விளக்கேற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது
எத்தனை விளக்குகள்: அதேபோல,வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதிலும் சந்தேகம் எழலாம். வீட்டு முற்றத்தில் 4 விளக்கும், சமையல் கூடத்தில் ஒரு விளக்கும், நடையில் இரண்டு விளக்கும், பின்கட்டில் 4 விளக்கும், திண்ணையில் 4, மாட குழியில் இரண்டு, நிலைப்படிக்கு 2, சாமி படத்துக்கு கீழே இரண்டு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இடத்தில் - 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டுமாம்.. அதாவது இந்த 27 விளக்குகளும், 27 நட்சத்திரங்களை குறிக்கக்கூடியது.












Click it and Unblock the Notifications