ஒரே ராசியில் இரண்டு பேர் இருந்தால் திருமணம் செய்யலாமா? 2 கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் தங்கி இருக்கலாமா
சென்னை: திருமண பொருத்தம் பார்த்துதான், மணமுடிப்பது பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.. மணம் முடிக்க போகும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, சந்தோஷம், இனிமையான தாம்பத்தியம், பிள்ளைப்பேறு, சுபீட்சமான எதிர்காலம் போன்றவை இரு ஜாதகங்களிலும் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தினை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது.. இதைதான் திருமண பொருத்தம் என்பார்கள். ஆனால், ஒரே ராசிக்காரர்கள், ஒரே நட்சத்திரக்காரர்கள் மணம் முடிப்பது சரியானதாக இருக்குமா? இரண்டு கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் இருக்கக்கூடாது என்று சொல்ல என்ன காரணம்? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
பொதுவாக, பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள் ஜோதிடர்கள்..

பரிகாரங்கள்
அதேபோல, மிருகசீரிடம், அஸ்வினி, பூரம், உத்திரம், கிருத்திகை, புனர்பூசம், பூசம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று நட்சத்திரமாக வந்தால், மணம் முடிக்கலாம். இவை, மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கும் ஒரே நட்சத்திரங்கள்தான். எனினும், இந்த நட்சத்திரங்களை 2 பேருமே கொண்டிருந்தால் பரிகாரம் செய்து, பிறகு மணம் முடித்து கொள்ளலாம்.
அதேபோல, ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன், மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்வதில் பாதகமில்லை.. ஏனென்றால், மேற்கண்டவை அனைத்தும் நல்ல பலனை பெற்றுத்தரக்கூடியவை..
ஒரே ராசி - மணம் முடிக்கலாமா
ஆனால், ஆண், பெண் இருபாலாரும் ஒரே நட்சத்திரமாக, ஒரே ராசியாக இருந்தால், மணம் முடிப்பதை தவிர்க்கலாம்.. அப்படி திருமணம் முடித்தால், ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவைகள் தாக்கும்போது, 2 பேருக்குமே சேர்ந்து தாக்கி துன்பம் வரக்கூடும்..
போதாக்குறைக்கு குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பத்தை தந்துவிடுவார். எனவேதான், ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரத்தில் இருப்போருக்கு மணமுடிக்கக்கூடாது என்பார்கள்.
ஒரே நட்சத்திரம் 10 பொருத்தம்
இருவரில் யாராவது ஒருவருக்கு மோசமான கோச்சார கிரக நிலைமை இருக்கும் சூழலில், மற்றொருவருக்கு அந்நேரத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருந்தால், ஒருவரையொருவர் தாங்கி பிடித்து கொள்ளக்கூடும்..
இருவருக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தால், நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்கூட, மாங்கல்ய பொருத்தம் இருக்காது.. எனவே, ஒரே நட்சத்திரம் இருந்தாலும் திருமணம் செய்வதை தவிர்க்கலாம். ஒருவேளை ஒரே ராசியுடைய கணவன் - மனைவிக்குள் கிரக நிலைகள் சரியில்லாமல் பிரச்சனைகள் சூழ்ந்துவிட்டால், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தம்பதியினர் சென்று வழிபடலாம்.
ஒரே வீட்டில் 2 கர்ப்பிணிகள்
இதுபோலவே ஒரே வீட்டில் 2 கர்ப்பிணிகள் இருக்க கூடாது என்பார்கள்.. அதாவது அவர்கள் அண்ணி, நாத்தனார் உறவுகளாக இருக்ககூடாது. காரணம், ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்து கொள்ளும்போது, யாராவது ஒருவரின் குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிடும். எனவே, 2 முறைகளில் உள்ளவர்கள் கர்ப்பமாக இருந்தால் ஒரே வீட்டில் இருப்பதை தவிர்த்து விடலாம்..
ஆனால், இந்த சாங்கியம், அக்கா, தங்கை அல்லது வேறு உறவு முறையில் உள்ளவர்களுக்கு பொருந்தாது.. அவர்கள் தாராளமாக ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications