விநாயகருக்கு சூட்டிய வெள்ளை எருக்கம்பூ மாலையை வீட்டுக்கு கொண்டு வரலாமா? வெள்ளெருக்கு பூவின் மகிமை
சென்னை: வெள்ளெருக்கு பூக்களின் முக்கியத்துவம் என்ன? விநாயகருக்கு ஏன் வெள்ளெருக்கு பூவில் மாலை கட்டி அணிவிக்கிறோம்? விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா? வீட்டில் வெள்ளெருக்கு செடிகளை வளர்க்கலாமா? இதுகுறித்து வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளன யாவை? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடியது என்பதால், சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது வெள்ளெருக்க பூக்கள் என்பார்கள்.. விநாயகருக்கும் வெள்ளெருக்கு பூவிலேயே மாலைகட்டி வழிபடுவார்கள்.. வறுமை நீங்க வேண்டும் என்பதற்காகவே, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு அணிவிப்பது வழக்கமாகும்.

எருக்க பூவில் மட்டும் 9 வகைகள் இருக்கிறதாம்.. கத்தரிப்பூ நிற எருக்கம் செடியும், வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடியும்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளெருக்கு மகிமை
வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள நீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. எருக்கஞ்செடி 12 வருடங்கள் வரை நீர் இல்லாமல் வாழும் தன்மை கொண்டது.. வெள்ளை எருக்கஞ்செடி அதிக இடங்களில் வளர்வதில்லை.. ஆனால், நீல எருக்கஞ்செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன..
எருக்கஞ்செடியில் உள்ள முற்றிய காய்கள் வெடித்து அதிலுள்ள பஞ்சுகள் ஆங்காங்கே சிதறி மண்ணில் புதைந்துவிடும்.. இதிலிருந்து இன்னொரு எருக்கஞ்செடி முளைக்கின்றது. எனவே எருக்கஞ்செடியை வளர்க்க யாருமே தேவையில்லை. அதுவாகவே மண்ணில் துளைத்து வளரக்கூடியது.
எருக்கஞ்செடி மகிமை
அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று அர்த்தமாம்.. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயர் உள்ளது.. அதனால்தான், சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடியாகவே உள்ளன..
விநாயகர் வழிபாட்டில், நீலநிற மற்றும் வெள்ளை நிறத்திலான இரண்டு எருக்கம் பூக்களுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. காரியத்தில் தடைகள் இருப்பவர்கள், ஆரோக்கியத்தில் குறைகள் உள்ளவர்கள் எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதால் நன்மைகளை பெறலாம்.
எருக்கம்பூ மாலை
ஆனால், விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வர தேவையில்லை.. எருக்கம்பூ மாலையை பிரசாதமாக அர்ச்சகர்களும் வழங்க மாட்டார்கள்.. அப்படியே தந்தாலும், இறைவனின் பிரசாதமாக பெண்களும் அதனை தலையில் வைத்துக் கொள்ள முடியாது.
அதேபோல, இந்த வெள்ளெருக்கு செடியை வீட்டில் வைத்து வளர்க்கலாமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.. வீட்டில் இதை வைத்து வளர்க்கும்போது, எதிர்மறை சக்தியை தடுத்துவிடும். பெரும்பாலும், பால் வடியும் செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பதால், இந்த எருக்கஞ்செடியையும் வீட்டில் வளர்க்க வேண்டாம் என்பார்கள்.
சுத்தமான பராமரிப்பு
ஒருவேளை இந்த செடியை வளர்ப்பதாக இருந்தால், சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க முடியாதவர்கள், இந்த செடியை சிவன் கோயிலிலேயே நட்டு வைத்துவிடலாம்.. வேண்டுமானால், வெள்ளெருக்கன் வேர்கட்டையை வாங்கி வீட்டுக்கு முன்பாக கட்டிவிடலாம்.
அதேபோல, விநாயகருக்கு வீட்டில் வைத்து பூஜை செய்யும்போது, வெள்ளெருக்கு வேர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால் நிதி சிக்கல் நீங்கும்.. எனவேதான், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு சூட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications