Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவன், மனைவி ஒரே ராசிக்காரர்களாக இருந்தால்? ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உடையவர்கள் கல்யாணம் செய்யலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ராசிக்காரர்கள், ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி செய்தால், அதன் பலன்கள் எப்படியிருக்கும்? எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? திருமணம் செய்யக்கூடிய ஒரே நட்சத்திரங்கள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கணவன், மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இனிமையான தாம்பத்தியம், பிள்ளைப்பேறு, சுபிட்சமான எதிர்காலம் போன்றவை இரண்டு பேரின் ஜாதகங்களிலும் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தை கொண்டு கணித்து அறிவதையே திருமண பொருத்தம் என்பார்கள்.

spirituality marriage

திருமணம் கூடாது: எனவே, எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்தெந்த நட்சத்திரம் திருமணத்துக்கு உகந்தது என்பதை அறிய வேண்டும். அந்தவகையில், திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரம்: பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பார்கள்.. சிறிதுகூட பொருத்தம் இல்லை என்பதால், இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது.:
ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன், மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம் என்கிறார்கள்.. காரணம், இவை நல்ல பலன்களை தரக்கூடியதாம்.

பரிகாரம்: அதேபோல, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம்.. காரணம் இவை, மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்தான் என்கிறார்கள். எனவே, இந்த நட்சத்திரங்களை இருவருமே கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.

அந்தவகையில், ஆண், பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாக, ஒரே ராசியாக இருந்தால், இவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்க்கலாம் என்கிறார்கள்.. காரணம், ஏழரைச் சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி வரும்போது இருவருக்குமே துன்பம் வந்து சேர்ந்துவிடுமாம். அதேபோல, குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே ஏற்படுத்திவிடுவார்.

கணவன் - மனைவி: எனவேதான், ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய கூடாது என்கிறார்கள். கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால், மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியமாகும்.. அப்போதுதான் ஓரளவாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும், இன்னொருவர் குடும்பத்தை தாங்கி பிடித்து இழுத்து சென்றுவிடுவார். இதனால் தான் ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர்

எனவே, திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் தம்பதியினருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால், நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்கூட, மாங்கல்ய பொருத்தம் இருக்காது.. அதனால்தான், ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது என்கிறார்கள்.

கிரக நிலைகள்: ஒரே ராசியுடைய தம்பதிகளின் வாழ்க்கையில் கிரக நிலைகள் சரியில்லாதபோது, ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். இதுபோல இன்னல்கள் ஏற்பட்டால், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று இந்த தம்பதியினர் வழிபாடு நடத்தலாம்... இதன் மூலம் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் குறையும் என்கிறார்கள் பெரியோர்கள்.

அதுமட்டுமல்ல, திருமண பொருத்தங்களை பார்க்கும்போது அவசரம் காட்டக்கூடாது என்றும், ஜாதகங்களை நிதானமாக ஆய்வு செய்து அதற்கு பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. மணமகள், மணமகன் இருவருடைய லக்னம், ராசி, நட்சத்திரம் இந்த மூன்றிற்கும் பொருந்தி வரக்கூடிய முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து, அதில் மிகச்சரியான முகூர்த்த நேரத்தை குறிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

கும்பகோணம் கோயில்: ராசிப் பொருத்தம் சரியாக அமையவும் கோயில்கள் பல உள்ளன. இது தம்பதியரின் ஒற்றுமையையும், அன்யோன்யத்தையும் உணர்த்தும் விஷயம் என்பதால், ஈசனும் உமையும் சேர்ந்திருக்கும் அமைப்புள்ள இறைவனை வணங்குதல் சரியான விஷயமாகும். எனவே, எப்பேர்ப்பட்ட தம்பதியினரின் பிரச்சனையாக இருந்தாலும், திருச்சத்திமுற்றம் என்ற தலத்துக்கு சென்று வரலாம். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்திற்கு அருகிலேயே இந்த கோயில் உள்ளது.

பிரிந்த தம்பதியிரையும் சேர்த்து வைக்கும் சக்தி இந்த கோயிலுக்கு உள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அருளும் ஈசனையும், கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ள அம்பாள் தவமிருந்த மாமரத்தையும் தரிசித்தாலும் தம்பதிக்குள் இணக்கம் ஏற்படுமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+