பழைய அகல் விளக்கை ஏற்றலாமா? இந்த 10 பொருளையும் உடனே வீட்டில் இருந்து எடுத்துடுங்க.. பணக்கஷ்டம் வரும்
சென்னை: வீடுகளில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சின்ன சின்ன தவறுகள்தான், குடும்பத்தில் மிகப்பெரிய பாதிப்பையும், சிக்கலையும் ஏற்படுத்திவிடுகின்றன. இதை மையப்படுத்திதான், நாள், கிழமை, திசை, வாஸ்து என்று நம்முடைய முன்னோர்கள் வகை வகையாக பிரித்து வைத்துள்ளார்கள்.. அந்தவகையில் சில பழைய பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், சில பழைய பொருட்களை பயன்படுத்தினால் தவறில்லை என்றும் சொல்கிறார்கள். அது என்னென்ன? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வீடுகளில், தினந்தோறும் மாலை நேரத்தில் முன்பக்க வாசலில் தீபம் ஏற்றினால், மகாலட்சுமி மகிழ்ச்சியடைந்து அந்த வீட்டிற்கு வரக்கூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் குடும்பத்தில் பொருளாதார நிலையும் வலுப்பெறுவதுடன், வீட்டிலிருந்து எதிர்மறைகள் அகற்றப்பட்டு, நேர்மறை சக்திகள் பெருகும். எனவே, சுத்தமான, சரியான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

பழைய பொருட்கள்
வீட்டிலுள்ள பொருட்கள் பழையதாகி விட்டாலோ, அல்லது பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், அந்த பொருட்களை பயன்படுத்தலாமா? எந்த அளவுக்கு பழைய பொருட்களை வீட்டில் வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு தரித்திரங்கள் நம்மை சூழ்கின்றன என்று அர்த்தம். எனவே, வீட்டில் பயன்படுத்தாத பொருட்களை முதலில் வெளியே வீசி எறிய வேண்டும்.
அதேபோல, பழைய துணிகள் வீட்டில் நிறைய சேர்ந்துவிட்டால், முதலில் அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் அவைகளை சேர்த்து வைத்தால், எதிர்மறை சக்திகள் பெருகிவிடும். முன்னேற்றத்திற்கும் தடையாகிவிடும்.
பயன்படுத்தப்படாத பழைய துணிகளை குப்பையில் போட்டுவிடக்கூடாது. இது தோஷங்கள் அதிகப்படுத்திவிடும். பழைய துணிகளை ஒன்றுசேர்த்து, நெருப்பில் போட்டு கொளுத்திவிடலாம்.
பழைய துணிகள்
பழைய துணிகளை உடுத்தாமல் இருந்தால், அவைகள் கிழியாமலும் இருந்தால், மற்றவர்களுக்கு தானமாக தரலாம்.. உடுத்தும் துணிகளை துவைக்காமல் தானம் தரக்கூடாது.. கிழிந்த துணிகளையும் தானம் தரக்கூடாது. துவைத்த துணிகளே என்றாலும், அதை கசங்கி போய் தானமாக தரக்கூடாது. சரியாக மடித்து, ஒரு பேப்பரில் சுற்றி வைத்து தானம் தரவேண்டும். அதாவது தானம் தரும்போது, அதை வாங்குபவர்களின் மனம் குளிர வேண்டும்.
பழைய அகல் விளக்குகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்.. புதிய அகல் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றினாலும், இந்த பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருந்தால், சுத்தம் செய்து விளக்கேற்றலாம்.. இதற்கு முன்னதாக சுடுநீரில் விளக்குகளை போட்டு, அதில் சோப்பு பவுடரை கொட்டி கலந்து ஊறவைக்க வேண்டும். விளக்குகள் நன்றாக ஊறினால்தான், பழைய எண்ணெய் பிசுக்கள் தங்கியிருந்தாலும் நீங்கிவிடும். இதுபோல பழைய அகல் விளக்குகள் அனைத்தையும் சேர்த்து கழுவி உலரவிட்டு பயன்படுத்தலாம்.
பழைய அகல் விளக்குகள்
புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தாலும்கூட, இதுபோலவே பாத்திரத்தில் தண்ணீரில் வட்டு ஊறவைக்க வேண்டும். இரவு ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசி உலரவிட்டு எடுக்கலாம்.. இப்படி செய்வதால், விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்துவிடாமல் இருக்கும். சிலசமயம் விளக்கில் ஈரம் அதிகமாக இருந்தாலும் எண்ணெய் உறிஞ்சிவிடும்.. அதேபோல காய்ந்த மண் அகல் விளக்குகளில், திரி போடும் இடத்தை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் சந்தனம், குங்குமம் வைப்பது சிறப்பு.
பழைய காலண்டர்கள்
சாமி படம் போட்ட பழைய காலண்டர்கள் இருந்தால், அதனை சிலர் குப்பையில் போட்டுவிடுவார்கள்.. சிலர் கோவிலில் மரத்தடியில், குளத்தடியில் வைத்துவிடுவார்கள்.. அல்லது வெளியில் கொண்டு சென்று வீச மனமின்றி, வீட்டிலேயே வைத்திருப்பார்கள்.
மேலும் சிலர், பழைய காலண்டர் மீதே புது காலண்டரை மாட்டி விடுவார்கள். இதுபோன்ற காரணங்களினாலும், குடும்பத்தில் இன்னல்கள் அதிகமாகும்.. வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையை இவை ஏற்படுத்திவிடும்.. குடும்பத்திலும் எதிர்மறை ஆற்றலையும் உண்டுபண்ணிவிடும். பழைய காலண்டர்கள் என்றாலே அவைகளை முதலில் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.
பழைய தீபத்திரிகள்
தீபத்திரியை மாற்றும்போது பழைய திரியை என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் குழம்பக்கூடும்.. சிலர் குப்பையில் போட்டுவிடுவார்கள்.. இப்படி செய்யக்கூடாது.. பழைய எரிந்த திரிகள் அனைத்தும் சிறிது சிறிதாக சேர்த்து வைக்கலாம். ஏதேனும் ஒருநாளில் இரவில் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி கழிக்கலாம். பழைய திரிகளை தூபக்காலில் போட்டு அனைவருக்கும் வலமிருந்து இடமாக 3 முறையும், இடமிருந்து வலமாக 3 முறையும் திருஷ்டி கழிக்க செய்யலாம்.
திருஷ்டி கழித்த திரிகளையும் குப்பையில் போட்டுவிடக்வடாது. இவைகளையும் வீட்டு வாசலிலேயே குவித்து எரிக்க வேண்டும். திரிகள் எரிந்து சாம்பலானதும், அந்த சாம்பலையும் குப்பையில் கொட்டாமல், ஓடும் நீர் அல்லது சமையலறை சிங்க்கில் கொட்டி தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.
பழைய பொருட்கள்
அதேபோல மொட்டை மாடியில் உபயோகப்படுத்தாத பொருட்களை போட்டு வைக்கக்கூடாது.. உதாரணத்துக்கு உடைந்து போன சேர்,டேபிள் உள்ளிட்ட நாற்காலிகள், பழைய துடைப்பங்கள், இரும்பு பொருட்களை போட்டு வைக்கக்கூடாது.. தேவையில்லை என்றால், உடனே அவைகளை தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். மாடி சுத்தமாக இருக்க வேண்டும். ஒருசிலர், அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்டவைகளை போட்டு வைத்திருப்பார்கள். இவைகளை வெளியில் எறிந்துவிட வேண்டும். அதேபோல வீட்டிற்குள் நின்று போன கடிகாரம், உடைந்த கடிகாரங்களை பயன்படுத்தவும் கூடாது, வைத்திருக்கவும் கூடாது.
வீட்டில் குவியலாக செருப்புகளை போட்டு வைப்பதும் பிரச்சனைகளை தந்துவிடும். பயன்படுத்தாத பழைய செருப்புக்கள் இருந்தால் முதலில் அதனை வெளியே வீசிவிட வேண்டும். பழைய செருப்புக்களை வைத்திருப்பதும் கஷ்டத்தை தந்துவிடுமாம்.
ஸ்டோர் ரூம் சுத்தம்
மற்ற அறைகளைப் போலவே ஸ்டோர்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்க்க பழைய துடைப்பான்கள் மட்டுமல்ல, வீட்டில் தரையை துடைக்கும் மாப்களையும் அங்கே வைக்க வேண்டாம் என்கிறார்கள். ஒருசிலர் வாகனங்களின் பழைய பொருட்களை பழைய டயர்கள் அல்லது உதிரி பாகங்களை ஸ்டோர்ரூமில் வைத்திருப்பார்கள்.. அந்த பொருட்கள் தேவையில்லை என்றால், அல்லது உடைந்திருந்தால் உடனே அப்புறப்படுத்திவிடலாம.
ஒருசிலர் பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகளை சேகரித்து வைத்திருப்பார்கள்.. ஓரளவு சேர்ந்ததுமே அவைகளை விற்றுவிட வேண்டும். நீண்ட நேரம் அங்கேயே போட்டு வைப்பதும், குடும்பத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடுமாம்.
உடைந்த எந்திரங்கள்
இதில் ஓடாத மின்சாதன பொருட்கள், தையல் மிஷின் போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.. சிலர் சின்ன வயதில் ஓட்டிய சைக்கிளைகூட வைத்திருப்பார்கள்.. இதுபோன்ற பாழடைந்த, பயன்படுத்தப்படாத எந்திரங்கள் வீட்டின் இயக்கத்தையே நிறுத்திவிடும்.. எதிர்மறை விளைவுகளை வீட்டிற்குள் கொண்டுவந்து விடும். சமையலறையிலும் பயன்படுத்தாத பாத்திரங்கள், நெளிந்த பாத்திரங்கள், உடைந்த பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது.
உடைந்த பூட்டு, உடைந்த பீரோவின் பூட்டு, பீரோவின் உடைந்த கைப்பிடி, இவைகளையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.. அதேபோல, கட்டில் பழையதாக இருந்தாலும் உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் பரவாயில்லை.. ஒருவேளை உடைந்த கட்டில், ஆட்டம் காணும் கட்டில், இவைகளை பயன்படுத்தினால், நோய் நொடிகள் குடும்பத்தாருக்கு வந்து சேரும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications