கன்னி தெய்வங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?
சென்னை: கன்னி தெய்வத்தை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா என்பது நிறைய பேருக்கு இருக்கும் சந்தேகம் ஆகும். இன்னும் சிலர் அது போன்ற சந்தேகம் ஏதும் இல்லாமலேயே கன்னி தெய்வங்களை வழிபட்டு வருவார்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் பாபா என்பவர் கூறியிருப்பதாவது: பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு இடையில் கன்னி தெய்வத்தை வைத்து வணங்குதல் கூடாது. கன்னி தெய்வங்கள் என்பது கல்யாணமாகாமல் அல்லது கன்னி கழியாமல் இறந்து போன 30 வயதுக்கு குறைந்தவர்கள் அவர்களை நினைத்து செய்யும் பூஜை ஆகும்.

குறிப்பிட்ட நாளில் கன்னி மூலையில் அவர்கள் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகள், உடைகள், பெண்கள் என்றால் பாவாடை தாவணி, ஜாக்கெட் துணி, சேலை, வளையல், குங்குமம், மஞ்சள், பூ ஆகியவை, பிடித்தமான விரும்பக்கூடிய பல பொருட்களை வைத்து வணங்குவது முறையாகும்.
அதுவே ஆண் கன்னி தெய்வமாக இருந்தால் வேட்டி, துண்டு மற்றும் லாகிரி வஸ்துக்கள், மது, சுருட்டு ஆகியவற்றையும் வைத்து வணங்குவார்கள்.
பாலாம்பிகா என்ற வாலைக்க குமரி தெய்வத்தை வணங்க பூஜை அறை ஏற்றது. ஏனென்றால் அது இயற்கையான ஒரு தெய்வம் மகா சக்தியின் குழந்தைப் பருவம், வாலைப்பருவம், வாலாம்பிகா என்றும் அழைப்பார்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications