Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திராஷ்டம நாளில் சாந்தி முகூர்த்தம் ஆகாது.. தலையற்ற, காலற்ற, உடலற்ற நாட்களில் தவறியும் வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமான தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம் குறிக்கும் போதும் சரியான நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியம். சந்திராஷ்டம நாளில் தவறியும் திருமணம், சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாள் குறிக்கக் கூடாது. தலையற்ற, காலற்ற, உடலற்ற நாட்களில் தவறியும் நல்ல காரியம் செய்ய வேண்டாம் என்று புலிப்பாணி ஜோதிடர் கூறியுள்ளார்.

திருமணமான ஆணும் பெண்ணும் இணைவது சாதாரண விசயமல்ல. இன்றைய லிவ் இன் வாழ்க்கையில் இதெல்லாம் தேவையா என்று யோசிப்பவர்களுக்கான கட்டுரை அல்ல. நமக்குப் பிறகு நமது தலைமுறையும் செழித்து வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்ப்பது எவ்வளவு அவசியமோ அதே போல முகூர்த்தம் குறிக்கும் நாள் சரியான நாளாக இருப்பது அவசியமாகும். ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலிரவு வாழ்நாளில் மறக்கமுடியாது. அந்த முதலிரவுக்கு முக்கியமாக முகூர்த்தம் குறிப்பார்கள்.

Chandrashtama day is not good for Marriage and Shanti Mugurtham

நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும்.

சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் நல்ல காரியங்கள், புதிய முயற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், வேலையில் சேருதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது அவசியம்.

திருமணம் செய்யப்போகும் மண மக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் முகூர்த்தம் குறிக்கக்கூடாது. கரிநாள் இருக்கிறதா என்றும் பார்ப்பது அவசியம். நல்ல பிள்ளைகளை உருவாக்குவதற்கு நல்ல எண்ணங்களை விதைப்பது அவசியம். அந்த நல்ல பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயற்சி செய்யும் நேரமும் நல்ல நேரமாக இருக்க வேண்டும். உயிர்கள் இன்றி உலகம் இயங்காது. ஆக இந்த உலகத்தையே இயக்குகின்ற அந்த சிவசக்தி ஐக்கியத்தினை ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம். திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான். வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைப்பார்கள் அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம். ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது...எமகண்டம்,ராகுகாலம் ஆகாது. இரவிலும் எமகண்டம் உண்டு.

திருமணம் செய்ய ஜோதிடரை அணுகி நல்ல நேரம் பார்ப்பது போல சாந்தி முகூர்த்தத்திற்கும் சரியான நாள், நேரம் பார்த்து தம்பதிகளை உறவில் ஈடுபட வைப்பது பல காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஜோதிடம்தில் சில நட்சத்திரங்களுக்கு தலை கிடையாது, சில நட்சத்திரங்களுக்கு உடல் கிடையாது, சில நட்சத்திரங்களுக்கு கால் கிடையாது. இத்தகைய உடல் ஊனம் அமைப்பு கொண்ட நட்சத்திரங்கள் வரும் முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம் போன்ற நல்ல காரியங்களை செய்யக்கூடாது.

குறிப்பாக ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள். ஆகவே இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு வைக்கக்கூடாது. அதே போல மிருகசிரீடம், சித்திரை,அவிட்டம் ஆகிய இந்த மூன்று நட்சத்திரங்களுக்கு உடல் கிடையாது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு கால்கள் கிடையாது.

கண்ட நேரத்தில் புது மண தம்பதிகள் இணைந்து அதனால் பிறக்கப்போற குழந்தைக்கு செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம் என தோஷமாக அமைந்து விட்டால் கஷ்டம்தான். அப்புறம் ரத்த வெறி, பாலியல் வன்முறை வெறி பிடித்த சைத்தான்களாகப் பிறந்து சமூகத்திற்கு கேடு செய்வார்கள். முதலிரவு நன்றாக அமைந்தால்தான் அதன்பின் வரப்போகிற அனைத்து இரவுகளும் நன்றாக அமையும். எனவேதான் திருமணத்திற்கு நேரம் குறிப்பது போல முதலிரவுக்கும் நல்ல நேரம் குறிக்கின்றனர்.

சாந்தி முகூர்த்தமானது தனிப்பட்ட கணவன் - மனைவியின் மன சந்தோஷ ஆரம்பத்துக்காக நிர்ணயிக்கப்படுவது அல்ல. பிரஜோத்பத்தி என்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்காக பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வுதான் இந்த சாந்தி முகூர்த்தம். பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு. அந்தக் கடமையின் பெயர்தான் பிரஜோத்பத்தி. அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் மகன், மகள் வயிற்றில் ஒரு பேரனையோ, பேத்தியையோ பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

வம்சம் விருத்தி அடையும்போதுதான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்சகதிக்குச் செல்ல இயலும். சிவமும், சக்தியும் ஐக்கியமானால் மட்டுமே உலகத்தில் உயிர்கள் தோன்ற முடியும். எனவேதான் படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த நேரத்தில் தேவைப்படுகிறது.ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

கிரகங்களின் சேர்க்கை சரியாக இருந்தால்தான் சாந்தி முகூர்த்தம் சரியாக நடந்து நல்ல புத்திசாலியான, ஆரோக்கியமான, நல்ல எண்ணங்களைக் கொண்ட குழந்தைகள் கருவாகி உருவாகும். சாந்தி முகூர்த்தம் குறிக்கும் நாளில் திதி துவிதியை,திரிதியை,சஷ்டி,சப்தமி, தசமி, ஏகாதசி,துவாதசி ,திரயோதசி ஆக இருக்கவேண்டும் சாந்தி முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ள சமயத்தில் மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய லக்னங்கள் உதயமாகி இருக்கவேண்டும். சுபர்களின் பார்வை இருக்க வேண்டும் எனவும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தலையற்ற, உடலற்ற மற்றும் நட்சத்திர நாட்களில் சாந்தி முகூர்த்தம் மட்டும் அல்ல நல்ல செயல்களுக்காக மேற்கொள்ளப்படும் பயணங்களையும் தவிர்க்க வேண்டுமாம்.

காலற்ற உடலற்ற நாளிற்
கோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.

வீடு கட்ட துவங்கும் மற்றும் புதுமனை குடிபுகும் நாட்களுக்கும் தவிர்க்க வேண்டும் என்கிறார் புலிப்பாணி ஜோதிடர். சரியான நாளில் சரியான விசயங்களை செய்வோம் நலமோடு வாழ்வோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+