சார்தாம் யாத்திரை: இமயமலையின் பத்ரிநாத் திருத்தலம் இன்று திறப்பு-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: கடவுள் பூமியாக வணங்கப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோவில் இன்று திறக்கப்பட்டது. இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான சார்தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் இன்று காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் திறக்கப்பட்டது.

இந்துக்களின் சார் தாம் யாத்திரை என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்திரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவதாகும். ஒவ்வொரு ஆண்டும் சார் தாம் யாத்திரையில் லட்சக்க்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

spirituality badrinath

இந்த திருத்தலங்கள் அனைத்தும் இமயமலையில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு சார்தா யாத்திரை கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கியது. அன்றைய தினம், முதல் கட்டமாக கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி திருத்தலங்கள் திறக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நாயன்மார்கள் போற்றிப் பாடிய திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத் திருக்கோவிலும் திறக்கப்பட்டது. இமயமலையில் 11,000 அடி உயரத்தில் உள்ள திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத் திருத்தலமானது,ஜோதிர்லிங்க சிவாலய திருத்தலம். அன்றைய நாளில் சார்தாம் யாத்திரையில் 12,000 பேர் பங்கெஎற்றனர்.

spirituality badrinath

கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட போது, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மனைவி கீதா உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசனம் செய்தனர். கேதார்நாத் திருக்கோவிலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முதல் பூஜை செய்தார். இந்த யாத்திரையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்துக்கள் பங்கேற்று சிவனை தரிசனம் செய்தனர். கேதார்நாத் திருக்கோவிலில் நடப்பாண்டு முதல் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் காசியில்தான் ஆரத்தி வழிபாடு இதுவரை நடைபெற்றது. தற்போது கேதார்நாத் திருக்கோவிலிலும் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. மந்தாகினி, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு திருத்தலமான பத்ரிநாத் கோவில் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பத்ரிநாத் கோவில் முழுவதும் மலாகளாலும் வ் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் ஆழ்வார்களின் பாசுரங்களில், திருவதரியாச்ரமம் என போற்றப்படுகிறது பத்ரிநாத். திருமங்கையாழ்வார் பத்ரிநாத் பெருமாளைப் போற்றி மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+