தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா.. தெற்கு ரயில்வே குட் நியூஸ்.. டிக்கெட் ரிசர்வ் பண்ணுங்க
தூத்துக்குடி: பனிமய மாதா கோவில் தங்க தேர் திருவிழா ஆகஸ்ட் ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை எழும்பூர் டூ தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 9 ஞாயிற்றுக்கிழமை முதல் ரிசர்வேசன் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை கடந்த 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 441வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை காலை அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடைபெறும்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வர். இதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் பனிமய மாதா கோவில் திருவிழாவில் தங்கத்தேர் பவனி நடைபெறும். இந்தாண்டு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது. இதனை காண பல்வேறு ஊர்களில் இருந்து தூத்துக்குடிக்கு மக்கள் வருவார்கள் என்பதால், அவர்கள் வசதிக்கேற்ப சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்க தேர் திருவிழாவை தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் சேவை குறித்து மதுரை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் - தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 3ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் தூத்துக்குடிக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 9ஆம் தேதி 8 மணி முதல் ரிசர்வ் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications