சம்போ மகாதேவா.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலம்..நாளை ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிவில் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலையில் கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.

திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் சாப்பிட நன்மைகள் நடைபெறும்.
சிதம்பரத்தில் இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கருவறை முன் உள்ள கொடிமரத்தில் தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினார். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.
தேர் திருவிழா ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் ஸ்ரீ நடராஜர் சித்ஸபையில் இருந்து தேருக்கு பவனி 26.12.23 pic.twitter.com/NEKTppQIeo
— Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா (@DevasabhaT) December 26, 2023
ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள் மாட வீதிகளில் வலம் வருகிறது. தேரோட்டத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து வந்தனர். கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவ பக்தர்கள் உற்சாகத்துடன் சிவதாண்டவம் ஆடி வந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
நாளைய தினம் 27ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜனவரி 28ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
மார்கழி திருவாதிரை நாளில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம். அன்றைய தினம் சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு சாப்பிட தரவேண்டும்.
விரதம் இருப்பவர்கள் அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications