யோகத்தை அள்ளி தரும் கிராம்பு.. பழைய கடிகாரம், செருப்பு, உடைந்த கண்ணாடியை உடனே எடுங்க: வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீடுகளிலுள்ள பொருட்களை சரியாக நிர்வகித்தாலே, பணப்பிரச்சனை நீங்கி, நிதிப்புழக்கம் அதிகமாகும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். வீட்டில் செய்யப்படும் சின்ன சின்ன மாற்றங்கள், மிகப்பெரிய பலனை குடும்பத்துக்கு பெற்றுத்தருமாம்.. அந்தவகையில், நிதி ஓட்டத்தை வீட்டிற்குள் நேர்மறை உணர்வையும் வரவேற்க செய்கிறது என்கிறார்கள். அந்தவகையில் எளிய வாஸ்து டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டிற்குள் பயன்படுத்தப்படாத மற்றும் பழைய பொருட்களை உடனே தூக்கியெறிய வேண்டும்.. குறிப்பாக, அறுந்த செருப்பு, பயன்படுத்தாத செருப்பு, கிழிந்த துணிகள், மக்கி மங்கலான துணிகள், சிறிய அளவாகிவிட்ட உடைகள், உடைந்த, ஓடாத கடிகாரங்கள், பழைய காலண்டர்கள், போன்றவற்றை உபயோகிக்க கூடாது.. உடனடியாக வெளியே வீசி எறிந்துவிட வேண்டும்.

Spirtuality Vast tips old clock

பழைய கண்ணாடி

காரணம், பழைய, பயன்படுத்தப்படாத பொருட்கள் ஆற்றல் ஓட்டத்தை தடுத்துவிடுகிறதாம். எனவே மூலை முடுக்குகளில் பயன்படுத்தப்படாத இடங்களிலும் உள்ள குப்பைகளை அகற்றிவிட வேண்டும்.. அனைத்து மூலை முடுக்குகளும் சுத்தமாக இருந்தால், செல்வத்தை சுதந்திரமாக புழக்கத்தில் விட அனுமதிக்க செய்கிறதாம்.. எனவே, பழைய பொருட்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதால் உடனே வெளியே வீசிவிட வேண்டும்.

அதேபோல பழைய காலண்டர்களையும் என்ன செய்வதென்றே தெரியாமல் பலர் விழிக்கக்கூடும்.. அதிலும் சாமி படங்கள் இருக்கும் காலண்டரை கீழே வீசவும் மனம் மிருக்காது.. என்றாலும், இதுபோன்ற பழைய காலண்டர்களே, உங்களது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாகிவிடுமாம்.

எனவே அவைகளை வீட்டில் சேமித்து வைக்காமல், உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். ஆனால் குப்பைகளில் போடாமல், ஓடும் நீரில் விட்டு விடலாம். அல்லது கோவில் மரங்களின் கீழே வைத்துவிடலாம்..

பழைய டைரி, உடைந்த பூட்டுகள்

பழைய டைரிகளையும், பழைய நியூஸ் பேப்பர்களையும் சேகரித்து வைக்கக்கூடாது.. பழைய டைரிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துமாம். அதேபோல சேதமடைந்த உடைந்த பூட்டுக்களையும் வீட்டில் வைத்திருக்ககூடாது.

குபேரன் ஆளும் வடக்கு திசையில் கடிகாரங்களையும், தென்மேற்கு மூலை அதாவது குபேர மூலையில் வடக்கு திசையை பார்த்த மாதிரி பணப்பெட்டியையும், பூஜை அறையில் சாமி படங்களை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியும், கண்ணாடியை வடக்கு அல்லது கிழக்கு திசையிலும், வைப்பது பண வரவை பெருக்கும். வீட்டின் ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்க்கலாம்..

கிராம்பு பரிகாரம்

நிதி நெருக்கடிகள் நீங்குவதற்கு கிராம்புவை வைத்து ஒரு எளிய பரிகாரம் செய்யலாம்.. ஒரு சிறிய கிண்ணத்தில் 3 கற்பூரம் 5 கிராம்புகளை நெருப்பில் போட்டு எரித்து விட வேண்டும். காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல், இந்த பரிகாரத்தை செய்துவரும்போது, நிதி நிலைமையை சீர் செய்யும்.

சிவப்பு நிற துணியில் கிராம்பு, பச்சைக்கற்பூரம் கட்டி வைத்து, பீரோவில் பணம் வைக்குமிடத்தில் வைக்கலாம்.. ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்வதால் லட்சமி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும்.

நல்ல காரியத்துக்கு செல்வதானால்கூட, வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு, 2 கிராம்பை வாயில் போட்டு சென்றால் பலன் கிடைக்கும்.. அதேபோல, செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு முன்பு மல்லிகை எண்ணெயால் விளக்கு போட்டு, அதில் 2 கிராம்பை போட வேண்டும்.. பிறகு ஹனுமன் சாலிசாவைப் படித்து, ஆரத்தி காட்டி, அனுமனிடம் உங்கள் பிரச்சனைகளை சொன்னால் போதும்.. இப்படி 21 செவ்வாய்க்கிழமை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கடின உழைப்பின் பலனை எளிதாக பெற முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+