தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை.. நவம்பர் மாத விரத நாட்கள், பண்டிகை நாட்களை நோட் பண்ணுங்க
சென்னை: நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை என பல்வேறு பண்டிகைகள் வர உள்ளன. எந்த நாட்களில் என்ன பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்று உங்கள் டைரியில் குறித்துக்கொள்ளுங்கள்.
நவம்பர் 1 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி. விநாயகப்பெருமானை வழிபட நோய், கடன் பிரச்சினைகள் நீங்கும். வம்பு வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

நவம்பர் 9 இந்திர ஏகாதசி: ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது. ஜாதகத்தில் பித்ரு சாபம் உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் பித்ரு சாபங்கள் நீங்கி குடும்ப வாழ்க்கையில் சுபிட்சங்களும், நிம்மதியும் உண்டாகும். இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வந்து நமது சக்திக்கேற்ப அன்னதானம் கொடுக்கலாம்.
நவம்பர் 10 கோவத்வ துவாதசி: கோவத்ச துவாதசி தினத்தில் மாலை நேரத்தில் பசு, கன்றுக்கு வாழைப்பழம் கொடுத்து வழிபட குடும்பம் செழிக்கும். 'தந்தேரஸ்' அன்று நாம் செய்யும் தானமானது பலமடங்கு பலனளிக்கும் என்பது வட மாநில மக்களின் நம்பிக்கை.
நவம்பர் 11 தனத்திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி, யமதீபம்: தன்வந்திரி ஜெயந்தி நாளில் தன்வந்திரி பகவானை வழிபட நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் பெருகும். தன திரயோதசி நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. சனி பகவானும் யமனும் சகோதரர்கள். ஆயினும்,தம்முள் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ,புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள். யமனும் சனியும் தீபாவளி அன்று மட்டும் தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வார்கள் என்பது நம்பிக்கை.
எமனின் ஆசி: தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றி, அந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். யமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வணங்கினால், விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமல் ,ஆரோக்கியமாக வாழ யமன் அருள் புரிவார் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
நவம்பர் 12 தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை: வாமன அவதாரத்தின் போது கடலுக்கு அடியில் சிறை வைக்கப்பட்டிருந்த பூமாதேவியை மகா விஷ்ணு விடுவித்தார், அப்போது பிறந்தவனே நரகாசுரன் என்கின்றன புராணங்கள். கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றும் இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி கொண்டாடுகின்றனர்.
நவம்பர் 13 அமாவாசை , கேதார கௌரி விரதம்: ஐப்பசி அமாவாசை நாளில் அதிகாலையில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். லட்சுமி குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பலகாரம் வைத்து தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். சோடசக்கலை நேரம் உள்ள அதிகாலை 2.30 மணி முதல் 4.37 மணிவரை மும்மூர்த்திகளை நினைத்து தியானம் செய்யலாம். மும்மூர்த்திகளின் அருள் கிடைக்கும்
நவம்பர் 15 யம துவிதியை: அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை துவிதியை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி கொண்டாட வேண்டும். எனவேதான் இந்த 5 நாட்கள் தீபாவளி பண்டிகை சாஸ்திரம் கூறுகிறது.
நவம்பர் 16 ஐப்பசி துலா ஸ்நானம் கடைமுழுக்கு : ஐப்பசி மாதத்தில் காவிரியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதற்கு ஏற்ற மாதம். துலா ஸ்நானம் செய்வது சிறப்பு. ஐப்பசி கடைசி நாளில் கடைமுழுக்கு தீர்த்தவாரி கடைபிடிக்கப்படுகிறது.
நவம்பர் 17 முடவன் முழுக்கு: முடவன் முழுக்கு ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்தனை செய்தார். இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளினார். இதன் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு என்று பெயர் பெற்றது.
நவம்பர் 18 கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் அமாவாசை மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். கந்த சஷ்டி நாளில் சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்தருளினார். இந்த புராண நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

நவம்பர் 19 பானு சப்தமி, விஜய சப்தமி: பானு சப்தமி நாளில் சூரிய பகவானை விரதமிருந்து வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடிய வாய்ப்பு கைகூடி வரும். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும்.
நவம்பர் 23 பிரபோதினி ஏகாதசி, கைசிக ஏகாதசி: கார்த்திகை மாததில் வளர்பிறை எனப்படும் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசி விரதம் கைசிக ஏகாதசி மற்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் விஷேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது. இந்த நாளில் விஷ்னு தரிசனம் மற்றும் விஷ்னு சஹஸ்ரநாம பாராயனம் செய்வதும் மோட்சத்தை அளிக்கும் என்பது ஐதீகம்.
நவம்பர் 26 திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழா: கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மலையே சிவனாக வணங்கப்படுவதால் இங்கு நடைபெறும் தீபத்திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications