Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை காடுதேடி வாரோமப்பா ஐயப்பா.. பெரு வழிப்பாதை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! நேரம் நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காட்டு வழியில் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்தப் பகுதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் ஆனது நீட்டிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட தமிழகத்தின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருகின்றனர்.

spirituality sabarimala mandala pooja


கடந்த 16ஆம் தேதி மண்டல பூஜை காலம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் வருகை ஒரு நாளைக்கு 90 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மல்ய தரிசனமும், தொடர்ந்து நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில்:

காலையில் 7 மணிக்கு உஷ பூஜையும், மதியம் 12 மணிக்கு களபாபிஷேகம். உச்ச பூஜை மேற்கொள்ளப்பட்டு ஒரு மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:00 மணிக்கு தீபாராதனையும் 7:00 மணிக்கு புஷ்பா அபிஷேகமும் ஒன்பதரை மணிக்கு அத்தால பூஜையும் ஐயப்பனுக்கு செய்யப்படுகிறது. தொடர்ந்து 10:50 க்கு ஹரிவராசனம் பாடப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

பெருவழிப்பாதை:

தொடர்ந்து எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாகவும், பம்பையில் இருந்து சிறு வழிப் பாதையாகவும் பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்கின்றனர். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரம் நீட்டிப்பு:

தொடர்ந்து கடந்த சில நாட்களாக சபரிமலை சன்னிதானத்துக்கு பக்தர்கள் வருகையும் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்திருக்கின்றனர். மேலும் இதுவரை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பெருவழிப்பாதை எனும் காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு அனுமதிக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை காட்டுப்பாதை:

இடுக்கி வண்டிப்பெரியாரிலிருந்து, சத்திரம்,புல் மேடு வழியாக சுமார் 26 கிலோமீட்டர் பயணம் செய்து பெருவழிப்பாதையில் பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக அவர்களுக்கு சிறப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டு எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாரிலிருந்து 14 கிலோமீட்டர் வாகனங்களில் பயணம் செய்து சத்திரம் வரை செல்லும் பக்தர்கள் அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சபரிமலைக்கு புல் மேடு வழியாக காட்டுப்பாதையில் செல்கின்றனர்.

சிறப்பு அறிவிப்பு:

மேலும் அழுதகடவு, முக்குழி பகுதிகள் வழியாகவும் செல்கின்றனர். இதனால் அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தை நீட்டித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அழுதகடவில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3.30 மணியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் முக்குழியில் இருந்து காலை 7:00 மணி முதல் மதியம் மூன்று மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அது மாலை 4 மணி என நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

திரும்பும் நேரம்:

அதே நேரத்தில் சத்திரத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட வில்லை. அங்கு காலை 7:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழக்கம் போல பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். அதே நேரத்தில் சபரிமலையில் இருந்து சத்திரத்திற்கு திரும்பும் நேரமும் மாற்றமின்றி காலை 8:00 மணி முதல் 11 மணி வரை திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+