கந்த சஷ்டி.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக கட்டணம் பல மடங்கு உயர்வு.. உண்மை என்ன?
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அபிஷேக தரிசனக் கட்டணம் மற்றும் விஸ்வரூப தரிசனக் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பல மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வரும் 18ஆம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திருக்கோவிலில் தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை இந்து சமய அறநிலையத்துறை தாறுமாறாக உயர்த்தியுள்ளதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு விஸ்வரூபம், உதயமார்த்தாண்டம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம், ஏகாந்தம், பள்ளியறை பூஜை உள்ளிட்ட 9 கால பூஜைகள் தினமும் நடக்கின்றன. இதில், காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், இரவு 7 மணி அர்த்தசாம அபிஷேகம் ஆகிய மூன்று காலங்களில் அபிஷேகம் மற்றும் தரிசனம் முக்கியமானது.
இந்த அபிஷேக நேரங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு வரை அபிஷேக தரிசன கட்டணமாக ரூ.200ம், வி.ஐ.பி தரிசனக் கட்டணமாக ரூ.1,000மும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து அபிஷேக தரிசனக் கட்டணத்தை ரூ.200 லிருந்து ரூ.500 ஆகவும், வி.ஐ.பி தரிசனக் கட்டணத்தை ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆகவும் இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியது.
இதேபோல, மாதந்தோறும் நடக்கும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மாதாந்திர வெள்ளிக்கிழமை ஆகிய விஷேச நாட்களில் மட்டும் அபிஷேக தரிசனக் கட்டணமாக ரூ. 2,000 ஆகவும், வி.ஐ.பி அபிஷேக தரிசனக் கட்டணம் ரூ.10,000 உயர்த்தினர். இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எவ்வளவோ கட்டணங்கள் வசூலித்தாலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்தது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா நாட்கள் என கூறி சிறப்பு அபிஷேகக் கட்டணம் என்ற பெயரில் ரூ.3,000 வரை வசூல் செய்யப்படுகிறது. அதே போல, சாதாரண நாட்களில் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ.100 மட்டுமே வசூல் செய்யப்பட்டது. தற்போது, விழாக்காலம் எனக் கூறி சிறப்பு கட்டணம் என்ற பெயரில் ரூ.2,000 வரை வசூல் செய்யப்படுகிறது.
ஆக மொத்தம், கந்த சஷ்டி விழா நடைபெறும் 7 நாட்களிலும் தரிசன கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்படுவதற்குப் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரூ.100 ஆக இருந்த விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தியது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், 'ஆணையர் உத்தரவில் தற்போது நடைமுறையில் உள்ள 100/- கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி 2023ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு மட்டும் விரைவு தரிசன கட்டணச்சீட்டாக எட்டு தினங்களுக்கு மட்டும் அதாவது 12.11.2023 முதல் 19.11.2023 வரை நபர் ஒன்றுக்கு ரூ.1000 நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தான் தனி தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. எப்போதும் போல பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications