வெற்றிவேல் முருகனுக்கு..ஜப்பானியர்களை கவர்ந்திழுத்த தமிழ் கடவுள்..பழனியே கொஞ்சம் பரபரப்பாயிருச்சே..!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ததோடு, போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புறவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பழனி முருகன் கோவில் : பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
நவபாஷாண சிலை: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதற்கு நவபாஷாண சிலை என்ற பெயர் ஏற்பட்டது. நவ என்றால் ஒன்பது என்று பெயர். 18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷாண சிலையைச் செய்தார் என்பது வரலாறு.

வெளிநாட்டு பக்தர்கள்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது பல்வேறு நாட்டு கரன்சிகள் கிடைப்பதே இதற்கு உதாரணம். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு பக்தர்களே முருகனுக்கு அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் பக்தர்கள்: இந்நிலையில் பழனி முருகனை ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேற்றனர். இவர்களில் பலரும் நல்ல தமிழ் பெயரை சூடியுள்ளனர். தமிழகம் வந்துள்ள இவர்கள் நவகிரக ஸ்தலங்கள், ஆறுபடை வீடுகள், சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபட வந்துள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமத்துடன் காட்சியளித்ததை பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications