அமாவாசை வருது..சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க போறீங்களா?அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்காக தான்
விருதுநகர்: பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் செல்வதற்கு நாளை மறுநாள் முதல் 8ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி மலை மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
மேலும் வனவிலங்கு மற்றும் காட்டாற்று வெள்ள அபாயம் காரணமாக வனத்துறையினர் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற ஓடைகளும் அங்கு விளைந்திருக்கும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் சதுரகிரி மலையின் மீது ஏறி இறங்கும் போது உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்றுப்படுவதால் பல நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சித்த மருத்துவர் கூட இங்கிருந்து தான் மூலிகைகளை பறித்துச் செல்கின்றனர்.
நான்கு திசைகளிலும் நான்கு மலைகள் என மொத்தம் 16 மலைகள் சமமாக சதுர வடிவில் அமைந்திருப்பதால் இந்த மலை சதுரகிரி மலை என பெயர் பெற்றது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய விரத தினங்கள், சித்ரா பௌர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபட அதிக அளவில் திரள்வது வழக்கம்.
கடந்த காலங்களில் இரவு நேரங்களில் சதுரகிரியில் பக்தர்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது.'
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்திருப்பதால் அங்கு பக்தர்கள் இரவில் தங்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நாட்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் அதிகமாகி பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை முதல் வருகின்ற எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் பக்தர்கள் விதிமீறல் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications