நடிகை சமந்தாவுக்கு தோல் நோயெல்லாம் இல்லை! சூனியம் வச்சிருக்காங்க? அதிர வைக்கும் தகவல்
சென்னை: நடிகை சமந்தாவுக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதால்தான் அவருக்கு தோல் நோய் ஏற்பட்டதாக வராஹி சித்தர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே நடிகை சமந்தா பழனி கோயிலுக்கு சென்று வழிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பசங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்துள்ளார்.

மேலும் இவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சூர்யா, விஜய், அதர்வா, நானி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர். இதையடுத்து சமந்தா யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படமாகும்.
இந்த நிலையில் திடீரென சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் தாக்கும். மேலும் இது தாங்க முடியாத வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் தசைகள் மிகவும் வலுவிழந்து காணப்படுவர்.
சமந்தா மிகவும் கடுமையான உடற்பயிற்சியை செய்யும் பழக்கம் கொண்டவர். ஆனாலும் இந்த நோயினால் அவர் பாதிக்கப்பட்டது எப்படி என தெரியவில்லை. அவர் இந்த நோய் பாதிதத்து முதல் உடற்பயிற்சி செய்வதில் கூட அவருக்கு சிக்கல்கள் எழுந்தன. இந்த நோய் பாதிப்பால் உடற்பயிற்சியோடு சேர்த்து ஆட்டோ இம்யூன் புரோட்டோக்கால் டயட் என்ற கடுமையான உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார்.
இந்த நோய் ஏற்பட்டால் தசைகள் பயங்கர வலியை கொடுக்கும். எலும்புகள் பலவீனமாகி சோர்வடைவர். நாளடைவில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்தது. கடுமையான ஒற்றை தலைவலியும் இருக்கும். கண்களில் ஊசி குத்துவது போன்று வலி இருக்கும். இந்த நோய் சுற்றுச்சூழல் மற்றும் மரபணுவால் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இந்த நோயிலிருந்து சமந்தா மெல்ல மெல்ல விடுபட்டதற்கு தனது அறிவுரைதான் காரணம் என ஒரு சித்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு வராஹி சித்தர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சமந்தாவுக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள். அவருக்கு நான் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பினேன். அதில் "உங்களுக்கு இருப்பது தோல் சார்ந்த பிரச்சினை இல்லை. மாந்த்ரீகம் சார்ந்த பிரச்சினை. எனவே இதற்கு நீங்கள் கோயிலுக்கு செல்வதுதான் சிறந்த தீர்வு என்றேன்.
அவரும் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு அவர் ஏன் சென்றார் என்றால், பழனியில் நவபாஷானத்தால் செய்யப்பட்ட முருகன் சிலை உள்ளது. இந்த நவபாஷானத்திற்கென ஒரு சக்தி இருக்கிறது.
அதாவது இந்த முருகன் சிலை மீது அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தையோ விபூதியையோ பயன்படுத்தினால் எப்பேர்பட்ட தோல் வியாதிகளும் குணமாகிவிடும். எனவே சமந்தா இதை அறிந்தே அங்கு சென்றிருப்பார். மேலும் அந்த தீர்த்தமோ, விபூதியோ சாமானிய மக்களுக்கு கிடைக்காது.
பிரபலங்கள், பணபலம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சமந்தா பிரபலம் என்பதால் அதை பெற்றிருப்பார் என அந்த சித்தர் தெரிவித்துள்ளார். மேலும் தோல் நோய்களுக்கு மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் என்ற கோயிலுக்கு செல்லலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications