வீட்டில் தீராத பணக் கஷ்டமா? "இந்த" திரியை வைத்து விளக்கேற்றினால்! எல்லாமே மாயமாகும்!
சென்னை: வீட்டில் பணக் கஷ்டம் தீரவில்லை என்றால் "இந்த" திரியை ஏற்றி வைத்து விளக்கேற்றினால் அனைத்து கஷ்டங்களும் மாயமாவதை காணலாம். அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிலர் பணம் இல்லாமல் தவிக்கும் உள்ளது. அவர்களுக்கு இந்த பரிகாரம் நல்லதொரு மாற்றத்தை தரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இதை செய்யலாம்.
இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தீராத பண கஷ்டத்தால் சிரமப்படுகிறீர்களா? வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

சில பேருக்கு நல்ல வருமானம் இருக்கும். ஆனால் வரக்கூடிய பணத்தை சரியான வழியில் செலவு செய்ய முடியாது. கையில் வாங்கிய சம்பளத்தை சந்தோஷமாக குடும்பத்திற்காகவோ, தனக்காகவோ செலவு செய்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் இருக்கும். சுக்கிர யோகம் கிடைக்க என்ன செய்வது? என பார்க்கலாம் வாங்க.
வெள்ளிக்கிழமை வழிபாடு: வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தீபம் ஏற்றும் திரியை நன்றாக திரித்து விடுங்கள். தீபமேற்றும் திரியையும், இந்த வெட்டிவேரையும் ஒன்றாக இணைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து விட்டு அதில் நெய் ஊற்றி தயார் செய்து வையுங்கள்.
இந்த வெட்டிவேர் திரியை வைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு மாதுளையை நைவேத்தியமாக வைக்க வேண்டும். அதன் பின்பு எப்போதும் போல உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வீட்டில் தீபத்தை ஏற்றி வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்.
குறிப்பிட்ட இந்த வெட்டிவேர் தீபத்தை ஏற்றி வைத்து அதில் எரியும் தீபச்சுடரை பார்த்து, உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும். இவ்வாறு வேண்டினால் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்.
பயன்கள்: மூன்று வாரம் தொடர்ந்து சுக்கிர ஓரையில் வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் வாழ்வில் நம்ப முடியாத சில நல்ல மாற்றங்கள் நிகழும். முடிந்தால் உங்களுடைய வீட்டில் ஒரு துளசி செடியை வைத்து வளர்க்க வேண்டும். அந்த துளசி செடிக்கு அருகில் சிறிய அளவில் மாதுளை செடியை வையுங்கள்.
துளசி செடியும், மாதுளை செடியும் அருகில் இருக்கக் கூடிய வீட்டில் பண கஷ்டம் வராது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷமும், செல்வமும் குறைவில்லாமல் இருக்கும். இவ்வாறு அவர் தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications