Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மணி பிளாண்ட்டை.. வீட்டில் வைத்தால் என்னாகும் தெரியுமா? பணம் வருதா? வரலையா? இதை முதல்ல ட்ரை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணி பிளான்ட், துளசி உள்ளிட்ட செடிகளை வீட்டுக்குள் வைத்தால் நிஜமாகவே பணம் சேருமா? செல்வம் பெருகுமா? வீடுகளுக்குள் வைக்கப்படும் செடிகள் என்னென்ன?

வீட்டுக்குள் செல்வம் கொழிக்க வேண்டுமானால், சில செடிகளை வளர்க்க வேண்டும் என்பார்கள்.. இதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. ஆன்மீக காரணமும் உண்டு.

Do you know about Money Plant Benefits and Super tips for growing money plant in you House

ஆக்ஸிஜன்: உதாரணத்துக்கு மணி பிளான்ட்டை எடுத்துக் கொண்டால், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும். இதனால், நம்மை சுற்றியுள்ள மாசு காற்று உள்வாங்கப்பட்டு, நமக்கு தேவையான நல்ல ஆக்ஸிஜைனை வெளியிடுகிறது..

அந்தவகையில், ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரங்களில் முதலிடத்தில் உள்ளது மணி பிளான்ட்கள்.. இந்த செடியை வீட்டில் வைக்கும்போது, பாம்பு, பூரான், தேள் போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் வருவதில்லை.. மாசு அதிகரிக்காமல், அந்த மாசை கட்டுப்படுத்துவதால்தான், இந்த செடியை ஹாலில் வைக்க சொல்கிறார்கள். அதுவும் இல்லாமல், டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது.

தென்கிழக்கு திசை: எதிர்மறை ஆற்றல்களை இழுத்துகொண்டு, நேர்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்க செய்யும் தன்மைகொண்டது இந்த மணி பிளான்ட். இதனால் வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலையும் மன நிலையும் பாதுகாக்கப்படுகிறது.

இதே ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால், தென்கிழக்கு திசையில் வைத்தால் அதிக பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.. இதனால் கடன் பிரச்சனைகள் தீருவதுடன், செல்வம் வந்து சேரும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல, பூஜையில் வைத்து வளர்ப்பதும் அதிகரித்து வருகிறது.

பழுத்த இலைகள்: தென்கிழக்கு என்பது விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசை என்பதாலும் அங்கு வைப்பது உகந்தது என்கிறார்கள்.. ஆனால், வடக்கு திசையில் மட்டும் இந்த செடியை வைக்கக் கூடாதாம்.

அதேபோல, இந்த செடியில் பழுத்த இலைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். காரணம், அது வீட்டிலுள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிக்கிறதாம். இலைகள் காய ஆரம்பித்தாலும் வெட்டிவிடலாம்..

பண வரவு: அதிக சூரிய ஒளியும் இதற்கு தேவையில்லை என்பதால், வீட்டிற்குள் வளர்க்கலாம். ஆனால், குடுவையில் இந்த செடியை வளர்க்கக்கூடாது.. தரையில் வைத்து இந்த செடியை வளர்த்தால், வேர்கள் நன்றாக பரவி வளரும். ஆனால், இந்த செடியை தரையில் படரவிடாமல், ஒரு கயிற்றில் படர விட வேண்டும்.. இதன் அடர்த்தியை பொறுத்து, பணவரவு கணிக்கப்படுகிறது. இந்த மணி பிளாண்ட்டை காயவிடக்கூடாது.. வாடவிடவும் கூடாது.. பராமரிக்காமல் விட்டுவிட்டால், துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படும்..

இந்த மணி பிளான்ட் செடியுடன் வெற்றிலை செடியையும் சேர்த்து வளர்த்தால், இன்னும் ஆற்றல் பெருகுமாம்.. காரணம், மகாலட்சுமியின் அம்சமாக வெற்றிலை கருதப்படுகிறது.. எனவே, பணவரவு தாராளமாகவே இருக்கும் என்கிறார்கள்..

மணி பிளான்ட்: அதேபோல, மணி பிளான்ட்டை யாருக்கும் தானமாக அல்லது அன்பளிப்பாக தரக்கூடாது. அப்படி தந்தால், வீட்டிலுள்ள அதிர்ஷ்டத்தையும் சேர்த்து தந்துவிடுவதாகிவிடும்.. அதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது.. இந்த மணி பிளான்ட் செடியை, திருடி வைத்தால், இன்னும் அபரிமிதமான நன்மைகள் நடக்குமாம்.

பணத்தை அதிகரிக்கும் மங்களகரமான செடியாக கருதப்படுவதைபோலவே மல்லிகை செடியையும் கருதுகிறார்கள்.. வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நன்மைதரக் கூடியதாம்..

செல்வம் பெருகும்: இயல்பாகவே மல்லிகைப்பூவுக்கு நல்ல மணம் உள்ளது.. எங்கெல்லாம் நல்ல வாசனை உள்ளதோ, அங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. எனவே மல்லிகை செடியை வாசலில் வைத்தால், அது வீட்டில் அதிர்ஷ்டம் கொட்டுவதுடன், நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க செய்து, செல்வத்தையும் பெருக்குவதாக நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+